சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். மேலும் நடிகர்கள், பிஜு மேனன், வித்யூத் ஜமால், நடிகை சாச்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
24
மதராஸி ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது?
மதராஸி திரைப்படம் ஓவர் ஹைப்போடு ரிலீஸ் ஆகாததால், இப்படத்திற்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இயக்குனர் முருகதாஸ் கடைசியாக இயக்கிய தர்பார் மற்றும் சிக்கந்தர் ஆகிய இரண்டு படங்களும் பிளாப் ஆனதால், இப்படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார் என நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். மறுபுறம் மாவீரன், அமரன் என தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மதராஸி ஹாட்ரிக் ஹிட் படமாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது.
34
மதராஸி பாக்ஸ் ஆபிஸ் வசூல்
மதராஸி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. அதன்படி இப்படம் மூன்று நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.62 கோடி வசூலித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ரூ.35 கோடி வசூலித்துள்ள இப்படம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.3.7 கோடியும், கர்நாடகாவில் ரூ.3.75 கோடியும், கேரளாவில் ரூ.1.5 கோடியும், இதர மாநிலங்களில் 70 லட்சமும் வசூலித்து உள்ளது. இதுதவிர வெளிநாடுகளில் இப்படம் ரூ.17.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை எட்டவும் வாய்ப்பு உள்ளது.
மதராஸி திரைப்படம் சுமார் 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் 30 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கி இருக்கிறார். இதுதவிர அவருக்கு படத்தின் லாபத்தில் இருந்து பங்கு வழங்கப்படுவதாகவும் டீலிங் போடப்பட்டு உள்ளது. மதராஸி திரைப்படம் 100 கோடி வசூலித்தால், நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் 100 கோடி வசூல் செய்த நான்காவது திரைப்படமாக மதராஸி அமையும். இதற்கு முன்னர் அந்த சாதனையை டாக்டர், டான், அமரன் போன்ற திரைப்படங்கள் படைத்திருக்கின்றன. அந்த பட்டியலில் மதராஸியும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.