
தமிழ் திரையுலகில், 90-களில் நடித்து முன்னணி நடிகராக பிரபலமானவர் நெப்போலியன். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில், 1991-ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் அறிமுகமான இவருக்கு, குமரேசன் என்கிற பெயரை நெப்போலியன் என மாற்றியவர் பாரதி ராஜா தான்.
திரையுலகில் அறிமுகமான ஒரே வருடத்தில், அதாவது... 1992-ஆம் ஆண்டு மட்டும் நெப்போலியன் நடிப்பில் மொத்தம், 9 படங்கள் வெளியானது. தொடர்ந்து குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்து வந்த, நெப்போலியன் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் சீவலப்பேரி பாண்டி. பிரதாப் போத்தன் மற்றும் கே .ராஜேஷ் ஆகியோர் இயக்ககத்தில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இந்த படத்திற்கு பின்னர் ஹீரோ சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார் நெப்போலியன். அந்த வகையில் இவர் நடித்த, தோழர் பாண்டியன், வனஜா கிரிஜா, சின்ன மணி, என் பொண்டாட்டி நல்லவ, எட்டுப்பட்டி ராசா, கிழக்கும் மேற்கும் போன்ற படங்கள் தரமான வெற்றியை பதிவு செய்தன.
முன்னணி நடிகராக இருக்கும் போதே... அரசியலிலும் கால் பதித்த நெப்போலியன் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானார், பின்னர் வேலூரில் பாராளமன்ற தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.யாக மாறினார். மத்திய இணை அமைச்சராகவும் 5 ஆண்டுகள் பணியாற்றிய நெப்போலியன், அரசியலில் நல்ல எதிர்காலம் இருந்த போது அதிரடியாக விலகினார்.
நெப்போலியன், 1993-ஆம் ஆண்டு ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில்... தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு 3 வயதில் தசைச்சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, 10 வயதில் நடக்க முடியாமல் வீல் சேரில் முடங்கும் நிலைக்கு ஆளானார். சித்த மருத்துவத்தின் உதவியுடன் ஓரளவு இந்த பிரச்சனை கட்டுக்குள் வந்த போதும், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து சென்றார் நெப்போலியன்.
தன்னுடைய மகனுக்காக, குடும்பத்தோடு அமெரிக்காவிலேயே செட்டில் ஆன இவர், அங்கு ஐடி நிறுவனம் ஒன்றையும், 1000 ஏக்கரில் விவசாயமும் செய்து வருகிறார். இதன் மூலம் கோடி கோடியாக நெப்போலியன் சம்பாதித்த நிலையில், அமெரிக்காவில் சுமார் 1000 முதல் 1500 கோடி கிட்ட தட்ட இவருக்கு சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகன் தனுஷுக்கு, நெப்போலியன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில்... அதற்க்கு பெண் தேடும் படலமும் நடந்து வந்தது. இந்நிலையில், தனுஷுக்கும் திருநெல்வேலியை சேர்ந்த பெண் அக்ஷயா என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், இவர்களின் திருமணம் ஜப்பான் நாட்டில் கடந்த வாரம் வெகு விமர்சியாக நடந்தது. இந்த திருமணத்தில், ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
2024-ல் டாப் வசூல் செய்த 6 படங்கள்! 10 நாளில் 3 ஹீரோக்களின் லைப் டைம் வசூலை முறியடித்த அமரன்!
விதவிதமான போட்டோ ஷூட், ஹல்தி, மெஹந்தி, திருமண ரிஷப்ஷனுடன் உள்ளிட்ட நிகழ்ச்சி உணவு அன்பளிப்பு என மகனின் திருமணத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தார். அந்த வகையில் தற்போது, தனுஷ் - அக்ஷ்யா திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியாகியுள்ளது. அதன்படி நெப்போலியன் மகன் திருமணத்திற்கு, சுமார் ரூபாய் 332 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.