கர்ப்பம் ஆனதால் கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து விலகலா? உண்மையை போட்டுடைத்த அர்த்திகா!

First Published | Nov 12, 2024, 9:10 AM IST

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த கார்த்திகை தீபம் சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த அர்த்திகா அந்த சீரியலில் இருந்து விலகியதற்கான உண்மை காரணத்தை கூறி இருக்கிறார்.

Karthigai deepam serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வந்த சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கார்த்திக் ராஜ் நாயகனாக நடித்திருந்தார். இவர் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக அர்த்திகா என்கிற மலையாள நடிகை நடித்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் டிஆர்பி ரேஸில் சன் டிவி, விஜய் டிவி சீரியல்களுக்கு போட்டியாக டாப் 10ல் இடம்பிடித்து அசத்தியது.

Karthigai deepam serial Arthika

கார்த்திகை தீபம் சீரியலின் முதல் சீசன் கடந்த வாரத்தோடு முடிவுக்கு வந்தது. அதில் ஹீரோயின் அர்த்திகா இறப்பது போன்ற காட்சியுடன் அந்த சீசனை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து நேற்று முதல் புது கதைக் களத்துடன் கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட தொடராக கார்த்திகை தீபம் ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் கார்த்திக் ராஜ் ஹீரோவா நடித்தாலும் ஹீரோயினாக அர்த்திகா நடிக்கவில்லை.

இதையும் படியுங்கள்... பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்ட கதை; ஹீரோயின் உள்பட கார்த்திகை தீபம் சீரியலில் இவ்வளவு மாற்றமா?

Tap to resize

Arthika Quits Karthigai deepam serial

அர்த்திகாவை சீரியலில் இருந்து தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக வைஷ்ணவி என்பவர் நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் சாமுண்டீஸ்வரி என்கிற வில்லை கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடிக்கிறார். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்கிற வில்லி கேரக்டரில் கலக்கிய ரேஷ்மா, தற்போது கார்த்திகை தீபம் தொடரிலும் வில்லியாக களமிறங்கி உள்ளதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

Serial Actress Arthika

இதனிடையே கார்த்திகை தீபம் சீரியலின் முதல் பாகம் திடீரென முடிவுக்கு கொண்டுவரப்பட்டதற்கு அர்த்திகா கர்ப்பமாக இருப்பதும் ஒரு காரணம் என செய்திகள் உலா வந்தன. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ள அர்த்திகா, தான் கர்ப்பமாக இல்லை என்றும், தனக்கு எந்தவித உடல்நலக்குறைபாடும் ஏற்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

why Arthika quit Karthigai deepam serial

அதேபோல் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியலில் நடிக்க வந்ததால் கார்த்திகை தீபம் சீரியலை விட்டு அர்த்திகா விலகியதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அர்த்திகா, தற்போது தான் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை என்றும், ஒருவேளை வேறு சீரியல்களில் கமிட் ஆனால் நிச்சயம் சொல்வேன் எனவும் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... விஜய் டிவியில் மற்றும் ஜீ தமிழ் ஹிட் சீரியல்கள் எட்டிய புதிய மையில் கல்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

Latest Videos

click me!