கங்குவா படத்துக்காக மிகவும் கம்மி சம்பளம் வாங்கிய சூர்யா - அதுக்குன்னு இவ்வளவுதானா?

First Published | Nov 12, 2024, 8:27 AM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சூர்யா, அப்படத்திற்காக வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம்.

Kanguva

சரித்திர படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி மவுசு உண்டு. உதாரணத்திற்கு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் தெலுங்கில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ, அதே அளவு வரவேற்பை தமிழிலும் பெற்றது. பாகுபலி ரேஞ்சுக்கு ஒரு தமிழ் படம் எப்போ வரும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வருகிறது கங்குவா. சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

Bobby Deol, Suriya

கங்குவா திரைப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானியும், வில்லனாக இந்தி நடிகர் பாபி தியோலும் நடித்துள்ளனர். மேலும் கருணாஸ், நட்டி நட்ராஜ், கார்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். கங்குவா பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... கங்குவா; பெங்களூருவில் அதிகாலை காட்சிகளில் வந்த புதிய சிக்கல்? கொதிக்கும் ரசிகர்கள்!

Tap to resize

kanguva Suriya

கங்குவா படத்தை சுமார் 350 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளார் ஞானவேல் ராஜா. வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக கங்குவா உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நடிகர் சூர்யா பிரான்சிஸ் மற்றும் கங்குவா ஆகிய இரு கேரக்டர்களில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக சுமார் 2 ஆண்டுகள் தீயாய் உழைத்துள்ள நடிகர் சூர்யா இப்படத்தின் வெற்றியை மலைபோல் நம்பி இருக்கிறார். ஏனெனில் அவர் நடிப்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை.

Suriya salary for Kanguva

கங்குவா படத்திற்காக 2 ஆண்டுகள் உழைத்திருந்தாலும் அப்படத்திற்கு மிகவும் கம்மியான சம்பளத்தையே நடிகர் சூர்யா வாங்கி இருக்கிறார். அதன்படி அவர் இப்படத்தில் நடிக்க வெறும் ரூ.39 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கி உள்ளார். அவரை விட நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் அதிக சம்பளம் வாங்கி வரும் நிலையில், சூர்யா கம்மி சம்பளம் வாங்கியதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால் கங்குவா படத்தின் லாபத்தில் இருந்து ஷேர் வாங்கவும் சூர்யா டீல் போட்டு உள்ளார்.

suriya got less salary for kanguva

சூர்யாவுக்கு அடுத்தபடியாக கங்குவா படத்தில் அதிக சம்பளம் வாங்கியது நடிகர் பாபி தியோல் தான். அவர் நடிக்கும் முதல் தமிழ் படமாக இது இருந்தாலும் இப்படத்திற்காக ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார் பாபி தியோல். இதற்கு அடுத்தபடியாக கங்குவா படத்தின் நாயகி திஷா பதானி இப்படத்திற்காக ரூ.3 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்...  ஒரே நாளில் ரிலீசாகும் 2 சூர்யா படங்கள்! கங்குவா உடன் இத்தனை படங்கள் மோதுகிறதா?

Latest Videos

click me!