கங்குவா; பெங்களூருவில் அதிகாலை காட்சிகளில் வந்த புதிய சிக்கல்? கொதிக்கும் ரசிகர்கள்!

First Published | Nov 11, 2024, 11:02 PM IST

Kanguva Movie : பெங்களூருவில் கங்குவா திரைப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சிகளில் சிக்கல் இருப்பதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர். 

Kanguva

இந்த ஆண்டு என்பதை தாண்டி, தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக மாறி இருக்கிறது நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் என்றால் அதே மிகையல்ல. முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை அம்சத்தில் இரு வேறு பரிமாணங்களில் நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவருடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பொருள் செலவில் உருவாகியிருக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றல்ல; மொத்தம் 2 படங்களில் கமலுக்கு வில்லனாக நடித்த டெல்லி கணேஷ் - எந்தெந்த படங்கள் தெரியுமா?

Suriya

கிட்டத்தட்ட உலக அளவில் 11,500 திரையரங்குகளில், 38 மொழிகளில் கங்குவா திரைப்படம் அனைத்து விதமான திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் உலக அளவில் 2000 கோடி வரை வசூல் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இன்னும் இந்த திரைப்படம் வெளியாவதற்கு மூன்று நாட்களே இருக்கும் நிலையில், பட குழுவினர் பெரிய அளவில் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

Latest Videos


Actor Suriya

குறிப்பாக நடிகர் சூர்யாவும் வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் தொடர்ச்சியாக பயணம் செய்து கங்குவா திரைப்படத்தை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வருகிறார். இந்த சூழலில் ஏற்கனவே கங்குவா திரைப்பட திரையரங்க ஷேர்களில் சில பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தற்போது பெங்களூருவில் கங்குவா திரைப்படம் திரையிடுவதில் சில பிரச்சினைகள் இருப்பதாக இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

Actor Suriya Kanguva

இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் அமுத பாரதி வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் "பெங்களூருவை பொருத்தவரை நவம்பர் 14ஆம் தேதிக்கான அதிகாலை 4 மணி ஷோக்களுக்கு, தெலுங்கு மொழியில் மட்டுமே கங்குவா படம் இருக்கிறது என்றும், தமிழ் மொழியில் திரைப்படம் அதிகாலை 4 மணி காட்சியில் இல்லை என்றும் தன்னுடைய வருத்தத்தை கூறி இருக்கிறார். தமிழ் திரைப்படத்தை முதல் நாளில் தமிழ் மொழியில் பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கர்நாடகாவை பொறுத்தவரை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் மோசமாக செயல்படடுள்ளதாகவும் கூறியுள்ளார்.

'அம்மன்' பட வில்லன் ராமி ரெட்டியை நினைவிருக்கா? சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் மரணித்த சோகம்!

click me!