ஒன்றல்ல; மொத்தம் 2 படங்களில் கமலுக்கு வில்லனாக நடித்த டெல்லி கணேஷ் - எந்தெந்த படங்கள் தெரியுமா?

Delhi Ganesh : பிரபல நடிகர் டெல்லி கணேஷ் இரண்டு திரைப்படங்ளில் உலக நாயகன் கமலுக்கு வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.

Delhi Ganesh

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் தனது 80வது வயதில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவு காலமானார். இன்று நவம்பர் 11ஆம் தேதி விமான படையினர் அளித்த இறுதி அஞ்சலிக்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக திரை உலகமே அவருடைய இழப்பை எண்ணி மனம் வாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் டெல்லி கணேஷ் மறைவிற்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்ததோடு அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தன்னுடைய ஆறுதல்களையும் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளைக் கடந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் டெல்லி கணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

'அம்மன்' பட வில்லன் ராமி ரெட்டியை நினைவிருக்கா? சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் மரணித்த சோகம்!

Actor Delhi Ganesh

கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கியவர் தான் டெல்லி கணேஷ். கிட்டதட்ட நான்கு தலைமுறை நடிகர்களோடு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் அவர் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி இளம் நடிகர் மணிகண்டன் வரை பலருடனும் பல திரைப்படங்களில் பணியாற்றி அசத்தியவர் அவர். ஆனால் பிற நடிகர் நடிகைகளின் ஒப்பிடும்போது உலகநாயகன் கமல்ஹாசனோடு பல முக்கிய கதாபாத்திரங்களில் அவர் நடித்திருக்கிறார்.


Delhi Ganesh Death

குறிப்பாக பிரபல நடிகர் கமல்ஹாசனின் நாயகன், தெனாலி, அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜன் போன்ற மெகா ஹிட் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ள டெல்லி கணேஷ், இரண்டு திரைப்படங்களில் நடிகர் கமலுக்கு வில்லனாகவும் நடித்து அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 1989 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அபூர்வ சகோதரர்கள். இந்த திரைப்படத்தில் பிரான்சிஸ் அன்பரசு என்கின்ற கதாபாத்திரத்தில் நாயகன் கமலின் அப்பா சேதுபதியை கொன்ற மூவரில் ஒருவராக நடித்திருப்பார் டெல்லி கணேஷ்.

Kamalhaasan

அதேபோல உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, நசுருதீன் ஷா உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் தான் ஹேராம். கடந்த 2000 ஆவது ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று டெல்லி கணேஷ் நடித்திருப்பார். அதிலும் ஷாருக்கானை கொல்லவரும் கும்பலின் தலைவனாக அவர் நடித்திருந்தது.

"தலைவரையே ஓவர் டேக் செய்த ரசிகன்" வசூலில் மிரட்டும் SKவின் அமரன் - லேட்டஸ்ட் அப்டேட்!

Latest Videos

click me!