முதல்முறையாக ஒரு ராணுவ அதிகாரியாகவும், பிரபல நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் இந்த திரைப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் தயாரானார். இதற்கென்று பிரத்தியேகமாக பல பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை சாய் பல்லவி ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த தீபாவளி திருநாளுக்கு வெளியான இந்த திரைப்படம் தற்பொழுது உலக அளவில் சிறப்பான வசூலை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தோடு இணைந்து வெளியான லக்கி பாஸ்கர், பிளடி பெக்கர் மற்றும் பிரதர் திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் செய்யாததும் குறிப்பிடத்தக்கது.