Rami Reddy Cinema Carrier
திரைத்துறை என்பது ஒரு கானல் நீர் என்பது ஒரு சில பிரபலங்களுக்கு பொருந்தும். சினிமாவில் கொடி கட்டி பரந்த பிரபலங்கள் சிலர், கடைசி காலத்தில்... வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் சாவித்திரி, சந்திரபாபு போன்ற சில லெஜெண்ட்ஸ் நடிகர்களும் அடங்குவார்கள்.
இவர்களை போலவே சினிமாவில் பல படங்களில், தன்னுடைய கட்டு மஸ்த்தான உடலை காட்டி.. சொட்டை தலையுடன் பார்வையாலேயே 90-ஸ் கிட்சை மிரட்டியவர் தான் ராமி ரெட்டி. 'அம்மன்' படத்தின் இவர் சொல்லும் சண்டா... சண்டா... என்கிற வார்த்தையை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.
Amman Movie Gorakh Character
சினிமா வாய்ப்பு தேடி, தெலுங்கு திரைப்பட கம்பெனிகளுக்கு ஏறி இறங்கினார். அந்த சமயத்தில் இவருக்கு தெலுங்கில் 'அனுக்ஷம்' என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த அதை கெட்டியாக பிடித்து கொண்டார். இந்த படத்தில் இவர் பேசிய 'ஸ்பாட் பெடதா' என்கிற ஒற்றை வார்த்தை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
Tamil cinema latest news
அடுத்தடுத்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ராமி ரெட்டிக்கு, தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தமிழில் இவர் முதலில் நடித்த திரைப்படம், 'நாடு அதை நாடு' என்கிற படம் என்றாலும்... இவரை பிரபலமடைய செய்தது 'அம்மன்' பட கோரக் கதாபாத்திரம் தான். இதை தொடர்ந்து, துள்ளித்திரிந்த காலம், நெஞ்சினிலே, ஆகிய படங்களில் மட்டுமே தமிழில் நடித்தார். மேலும் ஹிந்தி, கன்னடம், மலையாம், போஜ்புரி ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
2024-ல் டாப் வசூல் செய்த 6 படங்கள்! 10 நாளில் 3 ஹீரோக்களின் லைப் டைம் வசூலை முறியடித்த அமரன்!
Rami Reddy Sad Life
வில்லனாக நடிக்க லட்சக்கணக்கில் சம்பளம் பெற்ற இவர், சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஒரு நடிகராக இவர் தன்னுடைய வெற்றியை திரையுலகில் பதிவு செய்திருந்தாலும் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இவர் எடுத்த மற்றும் தயாரித்த படங்கள் தோல்வியை தழுவியது.
திரைப்பட தயாரிப்பில் மிகப்பெரிய பண தோல்வியை சந்தித்த ராமி ரெட்டி... உடல் நலனிலும் சில பிரச்சனைகளை சந்திக்க துவங்கினார். இறுதி நாட்களில், தன்னுடைய சிகிச்சைக்கு கூட பணமின்றி கல்லீரல் பிரச்சனை காரணமாக... மிகவும் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி 52 வயதில் காலமானார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு மகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.