தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் ஆக ஓடும் ‘அமரன்’ படம் அதற்குள் ஓடிடிக்கு வருகிறதா?

Published : Nov 12, 2024, 07:38 AM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

PREV
14
தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் ஆக ஓடும் ‘அமரன்’ படம் அதற்குள் ஓடிடிக்கு வருகிறதா?
Amaran

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர், கமல்ஹாசன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

24
Sivakarthikeyan, Sai Pallavi

அமரன் திரைப்படம் மறைந்த முன்னாள் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் முகுந்தின் மனைவியான இந்து ரெபேகா வர்கீஸ் கதாபாத்திரத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் அப்ளாஸ் வாங்கி இருந்தார் நடிகை சாய் பல்லவி. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது.

இதையும் படியுங்கள்... "தலைவரையே ஓவர் டேக் செய்த ரசிகன்" வசூலில் மிரட்டும் SKவின் அமரன் - லேட்டஸ்ட் அப்டேட்!

34
Sivakarthikeyan, Kamalhaasan

அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை ஆடி வருகிறது. முதல் நாளிலேயே ரூ.42 கோடி வசூலித்த இப்படம், இரண்டு வாரங்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. 10 நாட்களில் 200 கோடி எனும் இமாலய இலக்கை எட்டிய இப்படம், அடுத்ததாக 250 கோடி வசூலை நேக்கி நகர்ந்து வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனையையும் அமரன் படைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டில் அதிக வசூல் அள்ளிய படங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது அமரன்.

44
Amaran OTT release

இப்படி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸில் திடீர் ட்விஸ்ட் வைத்துள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம். வழக்கமாக ஒரு படம் ரிலீஸ் ஆனால் 28 நாட்களில் ஓடிடியில் வெளியிட்டுவிடலாம். ஆனால் அமரன் படம் ரிலீஸ் ஆகி 2 வாரங்களை கடந்தும் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டு இருப்பதால் இப்படத்தின் ஓடிடி ரிலீசை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தள்ளிவைத்து உள்ளது. இதனால் அப்படம் இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகாது. டிசம்பர் மாதம் அமரன் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... 2024-ல் டாப் வசூல் செய்த 6 படங்கள்! 10 நாளில் 3 ஹீரோக்களின் லைப் டைம் வசூலை முறியடித்த அமரன்!

click me!

Recommended Stories