கங்குவாவின் 1000 கோடி வசூல் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட அமரன்! தடைகளை தாண்டி சாதிப்பாரா சூர்யா?

Published : Nov 12, 2024, 11:29 AM IST

சூர்யா நடிப்பில் நவம்பர் 14-ந் தேதி திரைக்கு வர உள்ள கங்குவா திரைப்படம் தமிழ்நாட்டில் கம்மியான தியேட்டர்களில் மட்டுமே ரிலீசாகும் என கூறப்படுகிறது.

PREV
15
கங்குவாவின் 1000 கோடி வசூல் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட அமரன்! தடைகளை தாண்டி சாதிப்பாரா சூர்யா?
Amaran vs Kanguva

தமிழ் சினிமாவுக்கு இந்த 2024-ம் ஆண்டு ஏற்ற இறக்கத்தோடு தான் இருந்தது. இந்த ஆண்டின் முதல் 4 மாதத்தில் ஒரு ஹிட் படம் கூட தமிழில் ரிலீஸ் ஆக வில்லை. அந்த காலகட்டத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் என்கிற மலையாள படம் தான் தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படமாக இருந்தது. இதையடுத்து தமிழ் சினிமா, மே மாதம் முதல் தனது வசூல் வேட்டையை தொடங்கியது. அதன்படி மே மாதம் திரைக்கு வந்த அரண்மனை 4 திரைப்படம் தான் இந்த ஆண்டின் முதல் 100 கோடி வசூல் படமாகும்.

25
Kanguva Suriya

அதன்பின்னர் ஜூன் மாதம் விஜய் சேதுபதியின் மகாராஜா, ஜூலையில் தனுஷின் ராயன், ஆகஸ்டில் தங்கலான், செப்டம்பரில் விஜய்யின் கோட், அக்டோபரில் ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் சிவகார்த்திகேயனின் அமரன் என கடந்த 6 மாதங்களில் மட்டும் 7 நூறு கோடி வசூல் படங்களை கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. இதில் அதிகபட்சமாக விஜய்யின் கோட் படம் ரூ.450 கோடி வசூலித்து இருந்தது. அதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனின் அமரன் படம் 250 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடைபோட்டு வருகிறது.

35
Kanguva Movie Release

மற்ற மொழிகளில் 1000 கோடி வசூல் என்பது அசால்டாக உள்ள நிலையில், தமிழ் சினிமாவுக்கு அது எட்டாக்கனியாகவே உள்ளது. தமிழ் சினிமாவின் இந்த கனவை நனவாக்கும் படமாக கங்குவா இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 14-ந் தேதி தான் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் ரிலீசுக்கு முன்னரே இப்படம் 2000 கோடி வசூலிக்கும் என நம்புவதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பில்டப் கொடுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்... கங்குவா படத்துக்காக மிகவும் கம்மி சம்பளம் வாங்கிய சூர்யா - அதுக்குன்னு இவ்வளவுதானா?

45
Amaran vs Kanguva Clash

இதுதவிர நடிகர் சூர்யாவும் இப்படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். இப்படத்தை உலகமெங்கும் 11 ஆயிரத்து 500 திரைகளில் திரையிட உள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறி இருந்தார். அதில் தமிழ்நாட்டில் 900 திரைகளும் அடங்கி இருக்கும். ஆனால் தற்போது திடீர் ட்விஸ்டாக கங்குவா படத்துக்கு தமிழ்நாட்டில் 900 திரைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தான்.

55
Kanguva Movie

அமரன் படம் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருவதால் அப்படத்தை திரையரங்க உரிமையாளர்கள் தூக்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழ் நாட்டில் கங்குவா படத்திற்கு 500 திரைகள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஒருவேளை கம்மியான திரைகளில் கங்குவா படம் ரிலீஸ் ஆனால் அது அப்படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும். மேலும் அப்படத்தின் ஆயிரம் கோடி வசூல் கனவு தகர்ந்து போகவும் வாய்ப்புள்ளது. இதனால் கங்குவா படக்குழு சற்று கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் ஆக ஓடும் ‘அமரன்’ படம் அதற்குள் ஓடிடிக்கு வருகிறதா?

click me!

Recommended Stories