புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஒடேலா ஸ்ரீகாந்த். இவர் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் தான் தசரா. இப்படத்தில் நானி ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்தை எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இந்நிலையில், தசரா திரைப்படம் ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இந்த வார இறுதியிலும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்பதனால் இப்படம் ரூ. 200 கோடி வசூலை எட்டவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.