விரைவில் வெளியாகும் 'தலைவர் 171' படத்தின் அறிவிப்பு? திடுதிப்புனு ரஜினியை சந்தித்த லோகேஷ் கனகராஜ்!

Published : Apr 05, 2023, 07:02 PM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும், திடீரென சந்தித்து பேசியுள்ளதால், விரைவில் இவர்கள் இணையும் படம் குறித்த, அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.  

PREV
16
விரைவில் வெளியாகும் 'தலைவர் 171' படத்தின் அறிவிப்பு? திடுதிப்புனு ரஜினியை சந்தித்த லோகேஷ் கனகராஜ்!

தமிழ் திரையுலகில் ட்ரெண்டிங் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், போன்ற படங்கள் அடுத்தடுத்து வெறித்தனமான ஹிட் அடித்துள்ளதால், இவர் இயக்கும் படங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில், அதிகமாகவே நிலவி வருகிறது.

26

'மாஸ்டர்' படத்தில் விஜய்யை வித்தியாசமாக JD என்கிற கதாபாத்திரத்தில் காட்டி இருந்த லோகேஷ் கனகராஜ், அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் 'லியோ' படத்திற்காக கைகோர்த்துள்ளார். கேங் ஸ்டார் கதை அம்சம் கொண்ட படமாக, இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், ஆகியோர் நடிக்க உள்ளனர்.

சுயமாக எடுத்த முடிவால் சமந்தா படும் துயரம்! பாகுபலிகே டஃப் கொடுக்கும் விதத்தில் வெளியான சாகுந்தலம் பட ட்ரைலர்!

36

மேலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர், 'லியோ' படத்தில் விஜய்யுடன் ஜோடி போடுகிறார் திரிஷா. முக்கிய கதாபாத்திரத்தில் கதிர், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் காஷ்மீரில் முடிவடைந்த நிலையில்... அடுத்த கட்ட படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

46

இது ஒரு புறம் இருக்க, லியோ' படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் தலைவர் ரஜினிகாந்த் உடன் கை கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த். தன்னுடைய 170 ஆவது படத்தை, டிஜே ஞானவேல்  இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகை கஜோலின் மகளா இது? கடல் கன்னி போன்ற உடையில்... தூக்கலான கவர்ச்சியில் அம்மாவையே மிஞ்சிய நைசா!

56

இந்த படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இணைய உள்ளாராம். லியோ படத்தில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான், தலைவர் 171 படத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்...  தற்போது ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் திடீரென சந்தித்து பேசி உள்ளதால், அதற்கு முன்பாகவே வெளியாகுமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
 

66

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க இருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் ரஜினிகாந்த் அப்படத்தில் நடிக்கவில்லை. அதிரடி ஆக்சன் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தான் மீண்டும் நடிக்க ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளதாகவும், அதே நேரம் இப்படத்தை கமல்ஹாசனை தயாரிப்பாரா? அல்லது வேறு ஒரு முன்னணி நிறுவனம் தயாரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

நன்றி கெட்டவன் சூரி... சோறு போட்டதை கூட மறந்துட்டான்! வெளுத்தி வாங்கிய பிரபல நடிகர்..!
 

Read more Photos on
click me!

Recommended Stories