ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. இதில் பிரபல பாடகர்களான சங்கர் மகாதேவன், ஹரிசரண், பிரேம்ஜி மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னணி இசைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
"ஹை ஆன் யுவன் - லைவ் இன் ஐரோப்பா" என்ற தலைப்பில், ஃபாக்ஸ், நிமா மற்றும் ஃபிரேம் ஆகியவை யு1 ரிகார்ட்ஸ் உடன் இணைந்து இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. ஃபோன்கேர், அகிலம் , கரிகாலா சொக்கா மற்றும் ஆர்ட் டெகோ பிரஸ் ஸ்பான்சர்களாக உள்ள நிலையில், லண்டனுக்கான மீடியா பார்ட்னராக ஏஜேஎஸ் ஈவென்ட்ஸ் உள்ளது.
இவருடன் ஹரிசரண், திவாகர், ராகுல் நம்பியார், ரஞ்சித், பிரேம்ஜி, சங்கர் மகாதேவன், விஜய் யேசுதாஸ், சாம் விஷால், டிஜே, அஜய் கிருஷ்ணா, எம்.சி.சனா, ஆலாப், ஆண்ட்ரியா ஜெரிமியா, தன்வி ஷா, ரக்ஷிதா, பிரியங்கா, ஹரிப்ரியா, விஷ்ணுபிரியா, அனுஷ்யா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னணி கலைஞர்கள் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து "ஹை ஆன் யுவன்" நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட சில, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, நடிகையும் - பாடகியுமான ஆண்ட்ரியா வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, லைக்குகளையும் குவித்து வருகிறது.