மீண்டும் விஜய் - லோகேஷ் கூட்டணியில் இணைந்த விஜய் சேதுபதி... ‘லியோ’வில் என்ன சம்பவம் செய்யப்போகிறார் தெரியுமா?

Published : Apr 05, 2023, 03:26 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
மீண்டும் விஜய் - லோகேஷ் கூட்டணியில் இணைந்த விஜய் சேதுபதி... ‘லியோ’வில் என்ன சம்பவம் செய்யப்போகிறார் தெரியுமா?

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இணைந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என கோலிவுட் முதல் பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த அளவுக்கு மவுசு மிக்க இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

24

இவர் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க, சஞ்சய் தத், கவுதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறது. லியோ படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இப்படத்தின் புரோமோவிற்காக அவர் இசையமைத்த ஆங்கிலப் பாடல் வேறலெவல் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... வெற்றிமாறனுக்கு மரியாதை கொடுக்க மாட்டியா... வில்லங்கமாக மாறிய பிரதீப் ரங்கநாதனின் ‘விடுதலை’ டுவிட்

34

லியோ படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை அப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. குறிப்பாக காஷ்மீரில் 50 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்தியுள்ள படக்குழு, எஞ்சியுள்ள 50 சதவீத படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். லியோ படத்தை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், படத்தின் பணிகள் நான் ஸ்டாப் ஆக நடைபெற்று வருகிறது.

44

இந்நிலையில், லியோ படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இப்படத்தில் நடிகராக கமிட் ஆகவில்லையாம். அவரை பின்னணி குரல் கொடுப்பதற்காக லோகேஷ் அணுகி உள்ளாராம். இதற்காக விஜய் சேதுபதியிடம் மூன்று நாட்கள் கால்ஷீட் கேட்டு உள்ளாராம் லோகேஷ். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி இதற்கு ஓகே சொல்லிவிடுவார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கும்பகோணத்தில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த விக்கி - நயன்... என்ன காரணம் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories