பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல் தேவ்கன். மஹாராஷ்ட்ராவை சேர்ந்த இவர், ஹிந்தியில் 'பெகுடி' என்கிற படத்தின் மூலம் 1992 ஆம் ஆண்டு அறிமுகமானார். பின்னர் சல்மான் கான், ஷாருகான், சஞ்சய் தத், என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். திருமணம் ஆகி, சும்மா ஹீரோயின் போல் ஒரு மகள் இருக்கும் நிலையிலும் தொடர்ந்து திரையுலகில் தரமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.