naga chaitanya replies to samantha talks about past life
தென்னிந்திய முன்னணி நாயகியான சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்து தற்போது பாலிவுட்டிலும் தன் தடத்தை பதித்துள்ளார். தமிழில் சூர்யா, விஜய் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்து ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் சமந்தா . சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் முக்கோண காதல் கதையில் தோன்றி பாராட்டுகளை பெற்றிருந்தனர். அதோடு தெலுங்கு படமான புஷ்பாவில் இவர் போட்ட ஓ..சொல்ட்ரியா மாமா பாடல் குத்து உலக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.
மேலும் செய்திகளுக்கு..அஜித் 61' படத்தின் அடுத்த ஷெட்யூல் எங்கு தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!
naga chaitanya replies to samantha talks about past life
தற்போது பேமிலி மேன் சீசன் 2 விற்காக தயாராகி வரும் சமந்தாவின் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். முன்னதாக குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான இவர், விவாகரத்துக்கு பிறகு கவர்ச்சி புயலாக மாறிவிட்டார். இவரின் ஒர்க்கவுட் வீடியோ முதல் போட்டோஸ் வரை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.
naga chaitanya replies to samantha talks about past life
இதற்கிடையே பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் உடன் சமந்தா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில்அக்ஷய் குமாருடன் இவரின் நடனம் பார்வையாளர்களை கவர்ந்திருந்தது. அதோடு அந்தரங்க வாழ்க்கை குறித்த அதிக கேள்விகள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் சமந்தாவின் கணவர் நாகசைதன்யா குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அசராமல் பதில் அளித்து இருந்தார் சமந்தா.
மேலும் செய்திகளுக்கு...சங்கீதா விஜய்யின் பெற்றோர்கள் யார் தெரியுமா? வைரலாகும் குடும்ப போட்டோஸ் இதோ
தெலுங்கு சூப்பர் ஹீரோ நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதல் கரம் பிடித்த சமந்தா நான்காண்டுக்கு பிறகு தங்களது திருமண பந்தம் பிரிவது குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். சமூக வலைதளத்தில் இருவரும் ஒரே நேரத்தில் விவாகரத்து குறித்து பதிவு செய்து அதிர்ச்சி கொடுத்திருந்தனர். இதன் பிறகு தனது சொந்த வாழ்க்கை குறித்து எந்த தகவலையும் வெளியில் சொல்லாமல் இருந்த சமந்தா. சமீபத்திய நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார்.
naga chaitanya replies to samantha talks about past life
நிகழ்ச்சியின் போது சமந்தா விடம்.. விவகாரத்திற்கு பிறகு உங்கள் உறவு எப்படி இருக்கிறது என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த இவர் தன்னையும் அவரையும் ஒரே ரூமில் அடைத்தால் கூர்மையான ஆயுதங்களை அங்கே மறைத்து வைக்க வேண்டும் என கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...Nayanthara Rakki Celebration : தங்கைக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த நயன்தாரா.. வைரல் வீடியோ இதோ!
இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் நாகசைதன்யாவிடம், காபி வித் கரனில் சமந்தா கூறியது குறித்தான கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் சமந்தாவை கண்டால் ஹாய் சொல்லி கட்டி அணைப்பேன் எனக் கூறியுள்ளார். அதோடு இப்போது எல்லாம் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரங்களை செலவழிக்கிறேன். முன்னதாக என்னால் நிறைய மனம் திறந்து பேச இயலாது. இப்போது நான் ஒரு புதிய மனிதனாக இருக்கிறேன் என கூறியுள்ளார். தற்போது நாக சைதன்யா அமீர்கானுடன் இணைந்து நடித்துள்ள லால் சிங் சத்தா படம் இன்று வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்று வருகிறது.