Published : Dec 08, 2024, 08:03 AM ISTUpdated : Dec 08, 2024, 11:23 AM IST
Naga Chaitanya And Sobhita Dhulipala Honeymoon : நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா, அவருடன் எங்கு ஹனிமூன் செல்ல உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவரது முதல் மனைவி பெயர் லட்சுமி, அவருக்கு மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா, லட்சுமியை விவாகரத்து செய்து பிரிந்த நாகார்ஜுனா, இரண்டாவதாக நடிகை அமலாவை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அகில் என்கிற மகன் இருக்கிறார். தந்தையை போலவே அவரது மகன்கள் இருவருமே சினிமாவில் ஹீரோக்களாக நடித்து வருகிறார்கள்.
25
Naga Chaitanya weds Sobhita Dhulipala
நாகார்ஜுனாவை போலவே அவரது மகன் நாக சைதன்யாவின் இல்லற வாழ்க்கையும் அமைந்துள்ளது. முதலில் நடிகை சமந்தாவை காதலித்து வந்த நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் வைத்து நடைபெற்றது. இந்த திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
சமந்தாவை பிரிந்த கையோடு நடிகை சோபிதா துலிபாலா மீது காதல் வயப்பட்டார் நாக சைதன்யா. இந்த ஜோடி தங்கள் காதலை சீக்ரெட்டாக வைத்திருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு திருமணம் நிச்சயமானபோது அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நாகார்ஜுனா. சோபிதா - நாக சைதன்யா ஜோடியின் திருமணம் கடந்த டிசம்பர் 4-ந் தேதி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
45
Samantha, Naga Chaitanya, Sobhita Dhulipala
திருமணத்துக்கு பின்னர் புதுமணத் தம்பதிகள் ஹனிமூன் செல்வது வழக்கம். அந்த வகையில் சோபிதா உடன் நாக சைதன்யா எங்கு ஹனிமூன் செல்ல உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. முன்னதாக சமந்தா உடன் திருமணம் ஆனபோது அவரை அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கிற்கு அழைத்து சென்று அங்கு தன் ஹனிமூனை கொண்டாடி இருந்தார் நாக சைதன்யா.
55
Naga Chaitanya And Sobhita Dhulipala Honeymoon Plan
இந்த நிலையில், தனக்கு திருமணம் ஆனால் தான் எங்கு ஹனிமூன் கொண்டாட விரும்புவேன் என்கிற தகவலை நடிகை சோபிதா துலிபாலா முன்பே ஒரு நேர்காணலில் கூறி இருக்கிறார். அதன்படி ஐஸ்லாந்தில் தன் ஹனிமூனை கொண்டாட ஆசைப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அதனால் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரை ஐஸ்லாந்துக்கு நாக சைதன்யா அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.