sachana, RJ Ananthi, Jacquline
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. வழக்கமாக முதல் வாரத்தில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்துவிடும். ஆனால் இந்த சீசன் மட்டும் 9-வது வாரத்தில் தான் சூடுபிடித்தது. கடந்த 8 வாரங்களாக மந்தமாக சென்றுகொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் நடைபெற்ற ஏஞ்சல் வெர்சஸ் டெவில் டாஸ்க் தான் சண்டைகள் மற்றும் சச்சரவுகள் உடன் சென்றது. இதனால் அதிகளவில் கண்டெண்டும் கிடைத்தது.
Sounariya, Jacquline
இந்த டாஸ்க்கின் முதல் நாளில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் நாளில் இல்லை. அதற்கு ஸ்பாயிலராக அமைந்தது ஜாக்குலின் மற்றும் செளந்தர்யா தான். அவர்கள் தங்களால் யாரையும் கொடுமைப்படுத்த முடியாது என்று முதல் நாளே முட்டுக்கட்டை போட்ட நிலையில், இரண்டாம் நாளில் டெவிலாக விளையாடிய ரஞ்சித்தின் ஆட்டத்தையும் களைத்துவிட்டு அதற்கு பாராட்டு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் வீக் எண்ட் எபிசோடில் விஜய் சேதுபதி அவர்கள் இருவரையும் வெளுத்து வாங்கினார்.
Bigg Boss Tamil season 8
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆட்டத்தை கெடுக்கும் இவர்களின் கோவா கேங்கையும் லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி. இதுமாதிரி விளையாடுவதற்கு பதில் வெளியேறிவிடுங்கள் என்று ஓப்பனாக சாடினார். இப்படி ஜாக்குலின் மற்றும் செளந்தர்யாவை திட்டினாலும் விஜய் சேதுபதி இந்த வார எவிக்ஷனில் இருந்து சேவ் பண்ணிய முதல் இரண்டு நபர்கள் இவர்கள் தான். மேலும் நாமினேஷனில் சிக்கியுள்ள மற்ற 10 பேரில் இருந்து இந்த வாரம் இரண்டு பேரை எலிமினேட் செய்துள்ளார் விஜய் சேதுபதி.
இதையும் படியுங்கள்... டபுள் ஏவிக்ஷனா! பிரிகிறது காதல் ஜோடி; இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு குட்பை சொல்லும் இருவர் யார் தெரியுமா?
RJ Ananthi Eliminated
முதலில் வெளிவந்த தகவலின் படி தர்ஷிகாவை அவர் எலிமினேட் செய்துவிட்டதாக கூறப்பட்டது. அவர் விஷாலை காதலிப்பதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்பதால் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆனதாக தகவல் பரவி வந்தது. ஆனால் அது உண்மையில்லையாம். இந்த வாரம் தர்ஷிகா காப்பாற்றப்பட்டு, மக்கள் அளித்த வாக்குகளில் கம்மியான வாக்குகளை பெற்ற சாச்சனா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தியை தான் இந்த வாரம் எலிமினேட் செய்துள்ளார் விஜய் சேதுபதி.
Sachana Eliminated
அதில் சாச்சனா கடந்த இரண்டு வாரங்களாக ஓட்டிங்கில் கடைசில் இடத்தில் இருந்தும் அவரை காப்பாற்றி வந்த நிலையில், இந்த வாரம் வேறு வழியின்றி அவரை எலிமினேட் செய்துள்ளார் விஜய் சேதுபதி. இருப்பினும் கண்டெண்டே கொடுக்காமல் டம்மி பீஸுகளாக இருக்கும் ரஞ்சித், சத்யா, ரயான் ஆகியோரை விட்டுவிட்டு நன்றாக கேம் ஆடும் சாச்சனாவை எலிமினேட் செய்துள்ளதற்கு நெட்டிசன்கள் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கடைசி இடத்தில் இருந்த சாச்சனா; ஆனா எலிமினேட் ஆனது சிவா - நியாயமானு கேட்கும் சுஜா!