இந்த பாடலை விக்ரமும் – எம்.எஸ். விஸ்வநாதனும் இணைந்து பாடியிருந்தனர். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டான நிலையில், மேகமே, மேகமே பாடலும் ஹிட்டானது. இந்த பாடலுக்கென தனி ரசிக பட்டாளமே உள்ளனர்.
ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டின படத்தில் ஆர்யா, எமி ஜாக்சன் லீட் ரோல்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் தான் எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். வரலாற்று காதல் படமாக உருவான இந்த படம் தமிழ் பையனுக்கும் பிரிட்டிஷ் பெண்ணுக்கு இடையே ஏற்பட்ட காதலை மிகவும் சொல்லப்பட்டிருந்தது.