இளம் ஹீரோவுடன் காதல்? இரண்டாவது திருமணத்திற்கு தயாரான மெகா ஸ்டார் மகள் நிஹாரிகா!

First Published | Dec 7, 2024, 4:22 PM IST

மெகா குடும்பத்து வாரிசான நடிகை நிஹாரிகா முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில், இவரது இரண்டாவது திருமணம் குறித்த தகவல் டோலிவுட் திரையுலகில் உலா வர துவங்கியுள்ளது.
 

Niharika Konidela Second Marriage Rumor

நடிகை நிஹாரிகா கொனிடெலா மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும், தயாரிப்பாளருமான நாகேந்திர பாபுவின் மகள் ஆவார். வாரிசு நடிகை என்ற பிம்பத்துடன், திரையுலகில் அறிமுகமாகி தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். நடிகை என்பதை தாண்டி தொகுப்பாளினியாகவும்,  தயாரிப்பாளராகவும் அறியப்படும் நிஹாரிகா இரண்டாவது திருமணம் குறித்த தகவல் தான் டோலிவுட் திரையுலகில் வைரலாகி வருகிறது.

Niharika Konidela Divorce

இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு ஐஜி பிரபாகர ராவ் ஜொன்னலகட்டாவின் மகன் ஜொன்னலகட்டா சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் 2 வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ ஆரம்பித்தனர். இதை தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு அதிகார பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், சைதன்யாவுக்கு கூடிய விரைவில் நடிகை ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளதாக கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர் செய்திகள் வெளியான நிலையில், தற்போது நிஹாரிகாவின் திருமணம் குறித்த தகவலும் வெளியாகி வருகிறது.

டபுள் ஏவிக்ஷனா! பிரிகிறது காதல் ஜோடி; இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு குட்பை சொல்லும் இருவர் யார் தெரியுமா?

Tap to resize

Niharika Konidela love with young Actor

விவாகரத்துக்கு பின்னர் இவர் கொடுத்த சில பேட்டிகளில் இரண்டாவது திருமணம் குறித்து கேள்விகள் முன் வைக்கப்பட்ட போது, 'எனக்கு வயது அதிகம் இல்லை 30-வயது தான் ஆகிறது. எனவே ஒரு நல்ல மனிதர் என் வாழ்க்கையில் வந்தால், கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என கூறினார்.
 

Niharika Konidela Not Confirm Second Marriage

தற்போது நிஹாரிகா ஒரு இளம் நடிகரைக் காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. டோலிவுட் மீடியாக்களில் உலா வரும் இந்த செய்து எந்த அளவுக்கு நம்பகத்தன்மையுள்ளது என்பது தெயவில்லை. எதுவாக இருந்தாலும் கூடிய விரைவில் நிஹாரிக்கா தரப்பில் இருந்து அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

சோபிதா இடத்தில் வைக்கப்பட்ட நாய்; அக்கினேனி மருமகளுக்கு நேர்ந்த அவமானம்!
 

Latest Videos

click me!