டபுள் ஏவிக்ஷனா! பிரிகிறது காதல் ஜோடி; இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு குட்பை சொல்லும் இருவர் யார் தெரியுமா?

Published : Dec 07, 2024, 03:04 PM IST

Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டில் இருந்து வாரம் இரண்டு பேர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், மக்களின் வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தை பிடித்துள்ள இரு போட்டியாளர்கள் யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
15
டபுள் ஏவிக்ஷனா! பிரிகிறது காதல் ஜோடி; இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு குட்பை சொல்லும் இருவர் யார் தெரியுமா?
Vijay sethupathi hosting bigg boss tamil season 8

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விமர்சனங்களுக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார் ஆகியோர் வெளியேறி உள்ளனர்.
 

25
Bigg Boss contestant

இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சாச்சனா, சத்தியா, தீபக், கானா ஜெஃப்ரி, ஆர்.ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா ஜனனி, தர்ஷிகா, அர்ஷிதா, பிஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத், ராணவ், மஞ்சரி, ராயன், உள்ளிட்ட 17 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். 

சீரியல் டூ சினிமா! லட்சங்களில் சம்பளம்; கோடிகளில் சொத்து - வாணி போஜன் Net Worth எவ்வளவு தெரியுமா?
 

35
Bigg boss Double Eviction

நாட்கள் குறைவாகவும் போட்டியாளர்களின் எண்ணிக்கையை அதிகமாகவும் இருப்பாதால் இரண்டு போட்டியாளரை வெளியேற்றும் சூழலில் பிக்பாஸ் தரப்பு உள்ளது. கடந்த வாரமே டபுள் எவிக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சாச்சனா தப்பினார். ஆனால் இந்த முறை பிக்பாஸ் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் இருக்கும் 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 

45
Tharshika Eliminated

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9வது வாரத்தில், அதிக வாக்குகளை பெற்றிருப்பது முத்துக்குமரன் என கூறப்படுகிறது. இவரை தொடர்ந்து சௌந்தர்யா, ஜாக்குலின், ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். மேலும் மஞ்சரி, ராணவ், பவித்ரா ஆகியோர் இவர்களை தொடர்ந்து சேப் சோனில் உள்ளனர்.  டேஞ்சர் சோனில் உள்ளது ராயன், ரஞ்சித், சத்தியா, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா ஆகிய 6 பேர் உள்ளனர்.

சோபிதா இடத்தில் வைக்கப்பட்ட நாய்; அக்கினேனி மருமகளுக்கு நேர்ந்த அவமானம்!
 

55
Bigg Boss This week Elimination

இவர்களில் தர்ஷிகா 4.14 சதவீத வாக்குகளையும், ஆனந்தி 3.6 சதவீத வாக்குகளையும் பெற்று கடைசி இடத்தில உள்ளதால் இவர்கள் இருவர் தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  பிக் பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாக ஆர்.ஜே விஷாலுடன், காதல் கன்டென்ட் கொடுத்து வந்த தர்ஷிகா இந்த வாரம் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது பிக்பாஸ் ரசிகர்களை சற்று அப்செட் ஆக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Read more Photos on
click me!

Recommended Stories