சிவகார்த்திகேயன் யாருன்னே தெரியாது... வாய்விட்டு மாட்டிக்கொண்ட மிஷ்கின் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Published : Aug 05, 2022, 10:57 AM IST

Mysskin : சிவகார்த்திகேயன் பற்றி ஒரு பேட்டியில் கேட்டபோது அவர் யாருன்னே தெரியாது எனக் கூறிய மிஷ்கின் தற்போது அவருடனே நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

PREV
13
சிவகார்த்திகேயன் யாருன்னே தெரியாது... வாய்விட்டு மாட்டிக்கொண்ட மிஷ்கின் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இயக்குனர் வின்சண்ட் செல்வாவிடம் யூத், ஜித்தன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின், சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாவிட்டாலும் இப்படத்தில் மாளவிகா டான்ஸ் ஆடிய வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனது.

இதையடுத்து இவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பின்னர் நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் மிஷ்கின்.

23

இவர் இயக்கத்தில் தற்போது பிசாசு 2 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மிஷ்கின் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் சில படங்களில் கலக்கி உள்ளார். 

இதையும் படியுங்கள்... லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக சினிமாவில் அல்ட்ரா லெஜண்டாக களமிறங்குகிறாரா கிரண்குமார்? - அவரே சொன்ன ‘நச்’ பதில்

நந்தலாலா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த மிஷ்கின், அதன்பின் சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், பேச்சிலர் என பல படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். இந்நிலையில், தற்போது அவர் வில்லனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் மிஷ்கின்.

33

இதனால் தான் தற்போது நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் மிஷ்கின். அப்போது டிடி சில நடிகர்களின் பெயரை சொல்ல சொல்ல அவர்களைப் பற்றி ஒரு வரியில் பதிலளித்தார் மிஷ்கின்.

அப்படி முதல் சூப்பர்ஸ்டார் என்றதும் முள்ளும் மலரும் என கூறிய மிஷ்கின், அஜித்தை பற்றி கேட்டதும் பெரிய மனதுக்காரர் என்ற மிஷ்கின், சிவகார்த்திகேயன் பற்றி கேட்டதும் சற்றும் யோசிக்காமல் தெரியாது என கூறி இருந்தார். அவரின் அந்த பேட்டியை தற்போது வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், மிஷ்கினை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... விருமன் முடிந்த கையோடு சிவகார்த்திகேயனின் மாவீரனில் இணைந்த அதிதி..

Read more Photos on
click me!

Recommended Stories