சமீபத்தில் தேசிய விருதுகளை பெற்றுக்கொண்ட இயக்குனரின் மாவீரன் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரபல இயக்குனரின் மகள் இந்த படத்தில் இணைவது குறித்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இது குறித்து சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிதி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதோடு சிவகார்த்திகேயன் உடன் படப்பிடிப்பில் இணைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இதன் புகைப்படங்களும் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.