சினிமா மற்றும் ஊடகங்களின் வளர்ச்சியும்... முஸ்லிம் கலைஞர்களின் பங்களிப்பும்

First Published Mar 2, 2023, 12:44 PM IST

இந்திய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக, முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் முதல் எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வரை, ஏராளமான இந்திய முஸ்லிம்கள் தங்களது பங்களிப்பை வழங்குகின்றனர். 

இந்தியாவின் மிகவும் செழிப்பான திரையுலகமாக திகழும் பாலிவுட்டிலும் அதிகளவில் முஸ்லிம் நடிகர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஷாருக்கான், அமீர் கான், சல்மான் கான் போன்ற இந்தி நடிகர்கள் மிகவும் வெற்றிகரமான நடிகர்களாக வலம் வருகின்றனர். இதுதவிர, நவாசுதீன் சித்திக், குவாஹர் கான் மற்றும் ஹுமா குரேஷி போன்ற பல வளர்ந்து வரும் முஸ்லிம் நட்சத்திரங்களும் பாலிவுட்டில் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர்.

இப்படி இந்தியாவின் பொழுதுபோக்கு துறையில் தாக்கத்தை ஏற்படுத்துவது நடிகர்கள் மட்டுமல்ல. முஸ்லிம் எழுத்தாளர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் தொழில்துறையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மாபெரும் பங்காற்றி வருகின்றனர். உதாரணமாக, முஸ்லிமாக இருக்கும் அலி அப்பாஸ் ஜாபர், பாலிவுட்டில் "சுல்தான்" மற்றும் "டைகர் ஜிந்தா ஹை" போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

சினிமா மட்டுமின்றி இசை மற்றும் தொலைக்காட்சி போன்ற இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையிலும் முஸ்லிம்கள் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றனர். முஸ்லிம் பாடகர்களும் இசைக்கலைஞர்களும் பல தசாப்தங்களாக தொடர்ந்து ஹிட் பாடல்களையும், இசை ஆல்பங்களையும் உருவாக்கி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... அப்டேட்டுக்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த லைகா... ஏகே 62 அறிவிப்பு எப்போ ரிலீஸ்?

இந்தியாவில் மிகவும் பிரபலமான முஸ்லிம் இசைக்கலைஞர்களில் ஒருவர் உஸ்தாத் பிஸ்மில்லா கான். இவர் புகழ்பெற்ற ஷெனாய் இசைக்கலைஞர் ஆவார். கடந்த 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை இவர் பெற்றுள்ளார். இவரைத்தவிர ஜாகிர் ஹுசைன், இந்திய பாரம்பரிய இசைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக ஏராளமான விருதுகளுடன் அங்கீகரிக்கப்பட்ட சரோத் கலைஞர் அம்ஜத் அலி கான் மற்றும் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் பணியாற்றி பல சர்வதேச விருதுகளை வென்ற ஏ ஆர் ரகுமானும் ஒரு முஸ்லிம் இசைக்கலைஞர் தான்.

முஸ்லிம் பாடலாசிரியர்களும் இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். பாலிவுட்டின் மிகவும் பாராட்டப்பட்ட பாடலாசிரியர்களில் ஒருவரான ஜாவேத் அக்தர், தனது பணிக்காக ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். இதேபோல், மற்றொரு முஸ்லிம் பாடலாசிரியரான இர்ஷாத் கமில், "ஜப் வி மெட்," "ராக்ஸ்டார்," மற்றும் "தமாஷா" போன்ற பிரபல பாலிவுட் படங்களுக்கு பாடல் வரிகளை எழுதியதன் மூலம் பிரபலமானார்.

பொழுதுபோக்கு துறையை போல் பத்திரிகை துறையிலும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஏபிபி நியூஸின் மற்றொரு நட்சத்திர தொகுப்பாளரான ரூபிகா லியாகத்  மற்றும் சிஎன்என் ஐபிஎன் செய்தி சேனலில் பத்திரிகையாளரும் தொகுப்பாளருமான மரியா ஷகில் போன்ற பத்திரிகையாளர்கள் பல ஆண்டுகளாக தேசிய தொலைக்காட்சியில் பிரைம் டைம் விவாதங்களை முன்னெடுத்து நடத்தி  வருகின்றனர். இதுதவிர சீமா சிஸ்தி, அரிஃபா கனும், ஜாவேத் அன்சாரி போன்ற மூத்த பத்திரிகையாளர்களும் உள்ளனர். இவர்கள அனைவரும் இந்த சவாலான பணிகளை நேர்மையுடன் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஜெய் பீம் இயக்குனருடன் கூட்டணி அமைத்த ரஜினிகாந்த் - தரமான சம்பவத்துடன் தயாராகும் தலைவர் 170

ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையில் முஸ்லிம்களின் வளர்ச்சி அதிகளவில் இருந்தாலும், பிரதிநிதித்துவம் மற்றும் பன்முகத்தன்மை என வரும்போது அவர்கள் இன்னும் சவால்களை எதிர்கொண்டு தான் வருகிறார்கள். முஸ்லிம் நடிகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வெற்றி கண்ட போதிலும், தலித்துகள் மற்றும் LGBTQ போன்ற பிற விளிம்புநிலை சமூகங்களில் அதிக பிரதிநிதித்துவம் இன்னும் தேவைப்படுகிறது என்பது தான் உண்மை.

இந்தியாவின் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் முஸ்லிம்களின் எழுச்சியானது இந்தியாவின் கலாச்சாரத்தையும், பன்முகத்தன்மையையும் எடுத்துக்காட்டும் ஒரு நேர்மறையான வளர்ச்சியாகும். இன்று முஸ்லீம்கள் முத்திரை பதிக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இந்தியாவின் வளர்ச்சியில் அவர்கள் பங்காற்றி வருவது இதன்மூலம் நமக்குத் தெரிகிறது. இந்தியாவில் பொழுதுபோக்குத் துறையில் திறமைக்கு மிகவும் மதிப்பளிக்கப்படுகின்றன. இங்கு சாதிக்க அடையாளம் தேவையில்லை, திறமை இருந்தால் போதும். இதேபோன்ற நிலை நீடித்து மென்மேலும் திறமையான முஸ்லிம்கள் தொழில்துறையில் நுழைந்து அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பங்களிக்கும் ஒரு போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி ஆதாரம்: Awaz The Voice

இதையும் படியுங்கள்... கழட்டிவிட்ட டாப் ஹீரோஸ்... இளம் நடிகருடன் ஜோடி போட்டு கம்பேக் கொடுக்க ரெடியான அனுஷ்கா - வைரலாகும் பர்ஸ்ட் லுக்

click me!