ஜெய் பீம் இயக்குனருடன் கூட்டணி அமைத்த ரஜினிகாந்த் - தரமான சம்பவத்துடன் தயாராகும் தலைவர் 170

Published : Mar 02, 2023, 10:36 AM ISTUpdated : Mar 02, 2023, 10:48 AM IST

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

PREV
14
ஜெய் பீம் இயக்குனருடன் கூட்டணி அமைத்த ரஜினிகாந்த் - தரமான சம்பவத்துடன் தயாராகும் தலைவர் 170

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் கேமியோ ரோலில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் ரஜினிகாந்த்.

24

அதன்படி தற்காலிகமாக தலைவர் 170 என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜெய் பீம் போன்று இதுவும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ஒரு படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஆஸ்கர் மேடையை அலங்கரிக்கப் போகும் நாட்டு நாட்டு பாடல் - வெளியான வேறலெவல் அறிவிப்பு

34

லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லைகா குழுமத் தலைவர் சுபாஸ்கரன் அவர்கள் பிறந்தநாளில் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் அவர்களின் "தலைவர் 170" திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைமிகு தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் அவர்களின் "தலைவர்170" திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.

44

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், இசைவழி நம் இதயங்களை இணைக்கும் அனிருத் இசையில், பிரம்மாண்டமான திரைப்படங்களைப் படைத்தளிக்கும் சுபாஸ்கரன் தயாரிப்பில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமைப் பொறுப்பாளர் ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களின் தலைமையில், "தலைவர் 170" திரைப்படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சூப்பர் ஸ்டார் அவர்களின் ஒவ்வொரு திரைப்பட வெளியீடும், ரசிகர்கள் கொண்டாடும் திருவிழாதான். அவருடன் மீண்டும் இணைவதில் லைகா புரொடக்‌ஷன்ஸ் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துகளோடு 2024-ல் மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராவோம். நன்றி” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... கழட்டிவிட்ட டாப் ஹீரோஸ்... இளம் நடிகருடன் ஜோடி போட்டு கம்பேக் கொடுக்க ரெடியான அனுஷ்கா - வைரலாகும் பர்ஸ்ட் லுக்

Read more Photos on
click me!

Recommended Stories