ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஸ்ரேயா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது போல் தற்போது உலகமெங்கும் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்து வருகிறது இப்படம்.