Aadvik Ajith : ‘குட்டி தல’ ஆத்விக்கிற்கு பிறந்தநாள்... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட் கிளிக்ஸ் இதோ

Published : Mar 02, 2023, 08:31 AM IST

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளான இன்று அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

PREV
15
Aadvik Ajith : ‘குட்டி தல’ ஆத்விக்கிற்கு பிறந்தநாள்... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட் கிளிக்ஸ் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் அஜித். இவர் கடந்த 2000-ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். குறிப்பாக அஜித்தின் மகன் ஆத்விக்கை அஜித் ரசிகர்கள் குட்டி தல என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

25

அஜித்தின் மகன் ஆத்விக் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி பிறந்தார். அவர் பிறந்த தினமன்று டுவிட்டரில் குட்டி தல என்கிற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் உலகளவில் டிரெண்டாக்கி வைரலாக்கினர். இந்நிலையில், அஜித்தின் மகன் ஆத்விக் இன்று தனது 8-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையும் படியுங்கள்... மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு... வடிவேலுவுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்து ஏமாற்றிய கும்பல் - ஷாக்கிங் தகவல்

35

ஆத்விக் அஜித்தின் பிறந்தநாளான இன்று அஜித் ரசிகர்கள் அவர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது டுவிட்டரில் குட்டி தல என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகின்றது.

45

கால்பந்து விளையாட்டு பிரியரான ஆத்விக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியை காண தனது தாய் ஷாலினியுடன் வந்திருந்தார். அப்போது சென்னையின் எப்சி அணியின் ஜெர்சி அணிந்து ஆத்விக் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

55

ஆத்விக்கின் பிறந்தநாளான இன்று அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவரது புகைப்படங்களை பகிர்ந்து அஜித் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்...  தாஜ்மஹால் முன்பு காதல் மழை பொழிந்த... ஜெயம் ரவி - ஆர்த்தி..! சினிமாவை மிஞ்சிய ரொமான்ஸ் பண்ணும் ரியல் ஜோடி!

Read more Photos on
click me!

Recommended Stories