குழந்தைகள் ஹாலிவுட் படம் பார்த்தால் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை... இது எங்க?

First Published | Mar 2, 2023, 9:15 AM IST

ஹாலிவுட் படங்களை பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவர்களது பெற்றோர் 6 மாத காலம் தொழிலாளர் முகாம்களில் அடைக்கடுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வட கொரியா என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன் மற்றும் அங்கு நடைபெற்று வரும் சர்வாதிகார ஆட்சியும் தான். வடகொரியா மற்ற நாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகவே திகழ்ந்து வருகிறது. அங்கு ஊடகங்கள் உள்பட அனைத்துமே அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அங்கு பல வினோதமான சட்டங்களும் அவ்வப்போது நிறைவேற்றப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தான் தற்போது ஒரு வினோதமான சட்டத்தை கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு நிறைவேற்றி இருக்கிறது. அதன்படி வடகொரியாவில் உள்ள குழந்தைகள் ஹாலிவுட் அல்லது தென்கொரிய படங்களை பார்ப்பதற்கு தடை விதித்துள்ளது. அதையும் மீறி பார்க்கும் குழந்தைகள் 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்கிற கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதையும் படியுங்கள்... Aadvik Ajith : ‘குட்டி தல’ ஆத்விக்கிற்கு பிறந்தநாள்... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட் கிளிக்ஸ் இதோ

Tap to resize

அதுமட்டுமின்றி அந்த குழந்தைகளின் பெற்றோரும் 6 மாத காலம் வரை தொழிலாளர் முகாம்களில் அடைக்கடுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்னர் வரை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையான எச்சரிக்கைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அதற்கு கருணை காட்டப்படமாட்டாது என திட்டவட்டமாக கூறி இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.

இதனைக் கண்காணிக்க தனிக் குழுக்களை அமைத்து இருக்கிறதாம் வடகொரிய அரசு. மேற்கத்திய ஊடகங்களின் ஊடுருவலை தடுக்கவே இத்தகைய நடவடிக்கையை கிம் ஜாங் உன் அரசு மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியாவில் திரைப்படங்களுக்கு மட்டுமல்ல நடனமாடுவது, பாடல் பாடுவது உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு... வடிவேலுவுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்து ஏமாற்றிய கும்பல் - ஷாக்கிங் தகவல்

Latest Videos

click me!