அப்டேட்டுக்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த லைகா... ஏகே 62 அறிவிப்பு எப்போ ரிலீஸ்?

Published : Mar 02, 2023, 11:41 AM IST

அஜித்தின் ஏகே 62 படத்தின் அறிவிப்பை தான் லைகா நிறுவனம் வெளியிடும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

PREV
14
அப்டேட்டுக்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த லைகா... ஏகே 62 அறிவிப்பு எப்போ ரிலீஸ்?

நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அவர் நடிக்கும் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி அஜித் நடிக்க உள்ள அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்தாண்டே அறிவிப்பு வெளியானது. மேலும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

24

இதே கூட்டணியில் தான் ஏகே 62 திரைப்படம் தயாராகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லைகா நிறுவனம், விக்னேஷ் சிவனை இப்படத்திலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை இயக்குனராக கமிட் செய்தது. விக்னேஷ் சிவன் எதற்காக நீக்கப்பட்டார் என்கிற தகவலை இதுவரை லைகா நிறுவனம் வெளியிடவில்லை. இதனால் ஏகே 62 படத்தின் அப்டேட் எப்போது ரிலீஸ் ஆகும் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இதையும் படியுங்கள்... ஜெய் பீம் இயக்குனருடன் கூட்டணி அமைத்த ரஜினிகாந்த் - தரமான சம்பவத்துடன் தயாராகும் தலைவர் 170

34

இப்படி அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட்ட் கேட்டு வந்த நிலையில், நேற்று மாலை ஒரு அறிவிப்பை வெளியிட்ட லைகா, இன்று காலை 10.30 மணிக்கு பெரிய அறிவிப்பு வர உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. இதைப்பார்த்ததும் அஜித்தின் ஏகே 62 படத்தின் அறிவிப்பை தான் லைகா நிறுவனம் வெளியிடும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

44

லைகா நிறுவனம் இன்று காலை வெளியிட்ட பெரிய அறிவிப்பு ரஜினியின் அடுத்த படத்துடையது. அதாவது ரஜினியின் 170-வது படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவித்தனர். இதைப்பார்த்து ஷாக் ஆன அஜித் ரசிகர்கள் எப்போ தான் ஏகே 62 அப்டேட் வெளியிடுவீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். லைகா நிறுவனம் ஏகே 62 அப்டேட்டை மார்ச் 2-வது வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... ஆஸ்கர் மேடையை அலங்கரிக்கப் போகும் நாட்டு நாட்டு பாடல் - வெளியான வேறலெவல் அறிவிப்பு

click me!

Recommended Stories