இதெல்லாம் இசையமைப்பாளர் வித்யாசாகர் பாடிய பாடல்களா? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!

First Published | Dec 8, 2024, 8:44 AM IST

Music Director Vidyasagar : இசையமைப்பாளர் வித்யாசாகர் தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்துள்ள இவர், பாடியுள்ள பாடல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vidyasagar

தமிழ் சினிமாவில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களை கொடுத்து ஒரு Underrated இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் வித்யாசாகர். இவர் விஜய், ரஜினி, கமல் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இளையராஜா அளவுக்கு இவரை ரசிகர்கள் கொண்டாடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வித்யாசாகரை இசையமைப்பாளராக அனைவருக்கும் தெரியும், ஆனால் அவர் பாடகராஜவும் ஒரு சில ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். அது என்ன பாடல்கள் என்பதை பார்க்கலாம்.

Kadhal Sei Song

ஒரு பாடலின் ட்யூனும் லிரிக்ஸும் தனக்கு பிடித்திருந்தால் அப்பாடலை பாடுவாராம் வித்யாசாகர். அந்த வகையில் சிம்புதேவன் இயக்கிய அறை எண் 305ல் கடவுள் என்கிற திரைப்படத்தில் ‘காதல் செய்’ என்கிற பாடலை பாடி இருப்பார் வித்யாசாகர். இந்த பாடலின் சிச்சுவேஷனே பேண்டஸி நிறைந்ததாக இருக்கும். அதன்படி கடவுள் ஒரு மேன்சனில் தங்கி இருப்பார்.

அப்போது அங்குள்ள தாத்தா ஒருவர் டூர் போக வேண்டும் என ஆசைப்படுவார். அவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அனைவரையும் அழைத்துக் கொண்டு டூர் கிளம்புவார் கடவுள். அப்போது பஸ் ஓட்டிக்கொண்டே கடவுளாக நடித்த பிரகாஷ் ராஜ் பாடும் காதல் செய் பாடலை தான் வித்யாசாகர் பாடி இருப்பார். இந்த பாடலுக்கு நா முத்துக்குமார் பாடல் வரிகளை எழுதி இருந்தார்.

இதையும் படியுங்கள்... விக்ரம் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து பாடிய பாடல் எது? அட சூப்பர்ஹிட் பாட்டு தானா?

Tap to resize

Enna Pulla Senja nee

அடுத்ததாக கேபி ஜெகன் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ராமன் தேடிய சீதை படத்திற்கும் வித்யாசாகர் தான் இசையமைத்து இருந்தார். சேரன், பசுபதி, விமலா ராமன் நடித்திருந்த இப்படத்தில் நடிகை கார்த்திகாவை பார்த்து நிதின் சத்யா பாடும் ‘என்ன புள்ள செஞ்ச நீ’ என்கிற லவ் பெயிலியர் பாடல் மிகவும் ஹிட் ஆனது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் வித்யாசாகர் தான் தன் சொந்தக் குரலில் பாடி இருந்தார். இதுவும் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Palaanadhu Palaanadhu

அதேபோல் நடிகர் விஜய்யின் குருவி படத்திற்கு இசையமைத்த வித்யாசாகர் அப்படத்திலும் ஒரு சூப்பர் ஹிட் பாடலை பாடி இருக்கிறார். கில்லி படத்தின் வெற்றிக்கு பின்னர் வித்யாசாகர் இசையமைத்த விஜய் படம் தான் குருவி. தரணி இயக்கிய இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இதில் திரிஷாவும், விஜய்யும் கல்யாண வீட்டில் ஆடும் பல்லானதே என்கிற துள்ளலான பாடலை வித்யாசாகர் தான் பாடி இருந்தார். இசையமைப்பாளராக மட்டுமின்றி ஒரு Underrated பாடகராகவும் வித்யாசாகர் உள்ளார் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்... தடைவிதித்த சென்சார் போர்டுக்கே விபூதி அடித்து; இளையராஜா ஹிட்டாக்கிய பாடல் எது தெரியுமா?

Latest Videos

click me!