
சென்னையில் பிறந்து வளர்ந்த டி இமான் இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய உண்மையான பெயர் இம்மானுவேல் வசந்த் தினகரன். சினிமாவிற்கு வந்ததால் இமான் என ஷாட்டாக தன்னுடைய பெயரை வைத்து கொண்டார்.
இவர் இசையமைத்த முதல் படத்தின் ஹீரோ இன்று தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகர். அவர் தான் விஜய். தமிழன் படம் தான் டி இமானுக்கு முதல் படம். இந்தப் படத்தின் பாடல்கள் கொடுத்த ஹிட் அவரை சினிமாவின் அடுத்தடுத்த லெவலுக்கு கூட்டி சென்றது. அப்படி அவர் இசையமைத்த படங்களில் கிரி, திருவிளையாடல் ஆரம்பம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ரோமியோ ஜூலியட், டிக் டிக் டிக், விஸ்வாசம், அண்ணாத்த என்று மாஸ் படங்கள் உள்பட 100க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
Breaking: புதுப்பேட்டை - தெறி போன்ற படங்களில் நடித்த நடிகர் ஜெயசீலன் காலமானார்!
அஜித்தின் விஸ்வாசம் படம் தான் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. விஜய், அஜித், ரஜினிகாந்த், தனுஷ், அர்ஜூன், சிவகார்த்திகேயன், விஷால், ரவி மோகன் என்று எல்லா நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார் இமான். இப்போது மழை, பப்ளிக், வள்ளி மயில், மாம்போ, சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் என்று பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
முதல் மனைவியை கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து செரித்த டி இமான், ஏற்கனவே திருமணமாவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டார். இவரின் இரண்டாவது மனைவிக்கு முதல் கணவர் மூலம் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தேசிய விருது இசையமைப்பாளராக இருந்தாலும், தயாரிப்பாளர்களின் கஷ்டம் அறிந்து சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் என இவரை சொல்லலாம்.
ஆத்தாடி விஷாலின் மதகஜராஜா படத்தை பந்தாட இந்த வாரம் ரிலீஸ் ஆகும் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள்!
எனவே, திரையுலகில் இவரை பட்ஜெட் ஃபிரெண்லி இசையமைப்பாளர் என்றும் கூறுகின்றனர். ஒரு படத்திற்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். சமீபத்தில் ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் ரூ.18 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் அவர் இன்னும் 2, 3 கோடி வரையில் தான் சம்பளம் பெறுகிறார் என்பது ஆச்சரியமான விஷயம் தான்.
இந்த நிலையில் தான் இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடும் டி இமானின் சொத்து மதிப்புகள் எத்தனை கோடி என்ற விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் படங்களுக்கு மட்டுமின்றி சீரியல், விளம்பரங்கள் ஆகியவற்றிற்கும் இசையமைத்து அதன் மூலமாகவும் வருமானம் பெற்று வருகிறார். இதன் மூலமாக அவருக்கு ஒரு மாசத்திற்கு ரூ.1 கோடி வரையில் சம்பளம் வருகிறதாம். ஒரு வருடத்திற்கு ரூ.8 கோடிமுதல் ரூ.10 கோடி வரையில் டி இமான் சம்பாதிக்கிறார்.
விடுதலை 2 முதல் மோகன் லாலின் பரோஸ் வரை! இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆன படங்கள்!
இவருக்கு சென்னையில் இரண்டு வீடு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சொகுசு கார், மற்றும் நவீன ம்யூசிக் இஸ்டுமெண்டுடன் கூடிய மியூசிக் ஸ்டுடியோ ஒன்றையும் வைத்துளளார். இவரது நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ராஜ வாழ்க்கை வாழ்ந்து வரும் இமான் அறக்கட்டனை ஒன்றை துவங்கி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார் இமான். மேலும் திறமை இருந்தும் பின்னணி பாடுவது எட்டா கனியாக இருக்கும் சிலரின் ஆசையை நிறைவேற்றியவர் இமான். பார்வை குறைபாடு கொண்ட திருமூர்த்தி, உள்ளிட்ட பல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலங்களுக்கு இமான் பாடல்கள் பாட வாய்ப்பு கொடுள்ளார்.