வயசானாலும் திருமணமே செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் முரட்டு சிங்கிள் நடிகைகள்!

First Published | Jan 24, 2025, 4:12 PM IST

35 வயதுக்கு மேல் ஆன பின்னரும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வரும் தமிழ் சினிமா நடிகைகளின் பட்டியலை பார்க்கலாம்.

Unmarried Actress in Kollywood

நடிகர்களைக் காட்டிலும் சினிமா நடிகைகளின் திரை வாழ்க்கை மிகவும் குறுகியது. 10 - 15 ஆண்டுகள் வரை மட்டுமே பட வாய்ப்புகள் கிடைக்கும். அதன் பின் வயதைக் காரணம் காட்டி ஒதுக்கப்படுவார்கள். பெரும்பாலும் 30 வயதுக்கு மேல் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் பெரியளவில் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அக்கா அல்லது அம்மா வேடங்கள் தான் கிடைக்கும். இதன்காரணமாகவே நடிகைகள் 30 வயதை தாண்டிவிட்டாலே திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிடுவார்கள். அந்த வகையில் 35 வயதைக் கடந்தும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் முன்னணி நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

Anushka Shetty

அனுஷ்கா

கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகையான அனுஷ்காவுக்கு 42 வயதாகிறது. அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. பாகுபலி நடிகர் பிரபாஸ் மற்றும் தொழிலதிபர் உடனான காதல் வதந்திகளும் சிக்கினார் அனுஷ்கா. 


kiran Rathore

கிரண்

தமிழில் ஜெமினி, வின்னர், திருமலை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் கவர்ச்சி நடிகை கிரண். இவருக்கு 43 வயதாகிறது. அஜித், விஜய் படங்களில் நடித்த இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

Tabu

தபு

தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டே, காதல் தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தபு. இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். நடிகை தபு, 52 வயதைக் கடந்தும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

Poonam Bajwa

பூனம் பஜ்வா

ஹரி இயக்கிய சேவல் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதையடுத்து கச்சேரி ஆரம்பம், அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் நடித்த இவருக்கு தற்போது 39 வயது ஆகிறது. ஆனால் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. தற்போது காதலித்தும் வருகிறார் பூனம்.

இதையும் படியுங்கள்...பிரம்மாண்டத்தை வைத்து இனி பூச்சாண்டி காட்ட முடியாது! தமிழ் சினிமாவின் ஷாக்கிங் ரிப்போர்ட்

Trisha

திரிஷா

20 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக கோலோச்சி வருபவர் திரிஷா. இவருக்கு 41 வயது ஆகிறது. ராணா, வருண்மணியன் உடனான காதல் தோல்வியால் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

Shruti haasan

சுருதிஹாசன்

கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசனுக்கு தற்போது 38 வயது ஆகிறது. டூடுல் ஓவியர் சாந்தனுவை காதலித்து வந்த ஸ்ருதி அவரை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஏற்பட்ட மனக்கசப்பால் அவரை பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார்.

Nagma

நக்மா

ரஜினியுடன் பாட்ஷா படத்தில் நடித்த நக்மாவுக்கு தற்போது 50 வயது ஆகிறது. ஜோதிகாவின் சகோதரியான இவர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 50 வயதாகியும் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

Kovai Sarala

கோவை சரளா

நகைச்சுவை நடிகை கோவை சரளாவுக்கு தற்போது வயது 60ஐ கடந்துவிட்டது. திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அவர் இன்று வரை திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக உள்ளார்.

Andrea

ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியாவுக்கு 38 வயது ஆகிறது. இவர் தன்னை விட 6 வயது இளையவரான இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்தார். வயது வித்தியாசத்தால் இவர்கள் காதல் கைகூடாமல் போனது. காதல் முறிவுக்கு பின் இருவருமே இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகின்றனர்..

இதையும் படியுங்கள்... இயக்குனராகும் மணிகண்டன்; முதல் படமே 1000 கோடி வசூல் அள்ளிய நடிகருடனாம்!

Latest Videos

click me!