5) கேஃபின் நம்ம உடல் வேலைகளையும் அதிகப்படுத்தும். அதிகமா வேலை செய்றவங்க, உடல் உழைப்பு அதிகம் உள்ள வேலை செய்றவங்க, ஒரு காபி குடிச்சா எனர்ஜி அதிகமாகும், ஆக்டிவ்வா இருக்கலாம்.
6) பக்கவாதம் மாதிரி பிரச்சினைகளையும் கேஃபின் குறைக்கும். இல்லன்னா வராம தடுக்கும். கேஃபின்ல நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிற குணம் இருக்கறதால, நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட மனப்பிரச்சினைகள், மத்த பிரச்சினைகள் வராம இல்லன்னா அந்தப் பிரச்சினைகளோட ரிஸ்க் குறையும். அதனால அல்சைமர்ஸ் மாதிரி பிரச்சினைகள் வராம கொஞ்சம் தடுக்கும்.
7) சில சமயங்கள்ல வெயிட் குறைக்கறதுக்கும் இது உதவும். நேரடியா இல்லன்னாலும், வெயிட் குறைக்க, மெட்டபாலிசத்தை ஆக்டிவ்வா வைக்க இது உதவும்.
8) பிளாக் காபி குடிச்சா தண்ணி குடிக்கிற பழக்கம் அதிகமாகும். தாகம் எடுக்கும். அதனால, நிறைய தண்ணி குடிச்சு, உடல்ல நீர்ச்சத்து குறையாம இருக்க இது மறைமுகமா உதவும்.
இதையும் படியுங்கள்... 1 கிளாஸ் ஓம வாட்டர் போதும் எடை தானா குறையும்!