இயக்குனராகும் மணிகண்டன்; முதல் படமே 1000 கோடி வசூல் அள்ளிய நடிகருடனாம்!

First Published | Jan 24, 2025, 3:36 PM IST

குட் நைட், ஜெய் பீம், லவ்வர் படங்களின் நாயகன் மணிகண்டன் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம். அவரின் முதல் படத்தில் யார் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பதை பார்க்கலாம்.

Manikandan

நடிகர், உதவி இயக்குனர், டப்பிங் கலைஞர், டயலாக் ரைட்டர் என பன்முகத்திறமையாளராக வலம் வருபவர் மணிகண்டன். இவர் ஜெய் பீம் மற்றும் குட் நைட் படங்கள் மூலம் தான் புகழ் வெளிச்சம் பெற்றார். ஆனால் அதற்கு முன்னதாகவே ரஜினியின் காலா, விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும், ஹலீதா ஷமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ள மணிகண்டன், விக்ரம் வேதா திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும் ஒர்க் செய்துள்ளார்.

Actor Manikandan

பல குரல்களில் டப்பிங் பேசுவதில் கில்லாடியாக இருக்கும் மணிகண்டன். நடிகர் விஜய் சேதுபதிக்கே 10க்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் பேசி இருக்கிறார். அண்மையில் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு மட்டுமின்றி அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கிஷோருக்கும் மணிகண்டன் தான் டப்பிங் பேசி இருந்தார். இதுதவிர கோட் திரைப்படத்தில் விஜயகாந்துக்கு குரல் கொடுத்தது, வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்ததும் மணிகண்டன் தான்.

இதையும் படியுங்கள்... ப்ளூ சட்டையே இப்படி சொல்லிட்டாரே; குடும்பஸ்தன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ


Manikandan Debut as Director

ஹீரோவான பின்னரும் டப்பிங் கலைஞராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார் மணிகண்டன். ஹீரோவாக குட் நைட், லவ்வர் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த மணிகண்டன், தற்போது குடும்பஸ்தன் படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை ருசித்திருக்கிறார். இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள குடும்பஸ்தன் திரைப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளாராம்.

Manikandan Debut Movie Hero Vijay Sethupathi

மணிகண்டன் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடி வசூல் செய்த ஒரு நடிகர் தான். அவர் வேறுயாருமில்லை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான். இவர் நடித்த ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் அள்ளிய நிலையில், தற்போது தமிழில் பிசியாக நடித்து வருகிறார். இவருடன் நீண்ட காலமாக பழகி வரும் மணிகண்டன், தன்னிடம் உள்ள கதை ஒன்றை சொல்ல, அது விஜய் சேதுபதிக்கு பிடித்துப் போனதால் அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் விரைவில் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ள படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பிரம்மாண்டத்தை வைத்து இனி பூச்சாண்டி காட்ட முடியாது! தமிழ் சினிமாவின் ஷாக்கிங் ரிப்போர்ட்

Latest Videos

click me!