வங்கதேசத்தில் ஸ்டார் சினி பிளெக்ஸ் எனும் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த தியேட்டருக்கு முன் சமன் அலி சர்கார் என்பவர் படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது டிக்கெட் எடுக்க சென்றபோது அவருக்கு தியேட்டர் ஊழியர்கள் டிக்கெட் தர மறுத்துள்ளனர். ஏன் என்று கேட்டதற்கு லுங்கி அணிந்து வந்தவர்களை அனுமதிக்க மாட்டோம் என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.