Nithya Menen : நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் அது உண்மையில்லை என அவரே விளக்கம் அளித்தார்.
மலையாள நடிகையான நித்யா மேனன் தமிழில் நானி நடிப்பில் வெளியான வெப்பம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து காஞ்சனா 2, மணிரத்னத்தின் ஓகே கண்மனி போன்ற படங்களில் நடித்த இவர் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.
24
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன், தற்போது திருச்சிற்றம்பலம் என்கிற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் தேன்மொழி என்கிற கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 18ந் தேதி ரிலீசாக உள்ளது.
இதனிடையே சமீபத்தில் நடிகை நித்யா மேனன் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதன்பின் அது உண்மையில்லை என விளக்கம் அளித்தார் நித்யா மேனன். இந்த செய்தி வைரலாக பரவியதற்கு சந்தோஷ் வர்க்கி என்கிற இளைஞர் தான் காரணமாம். அவர்தான் நித்யா மேனனை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பேட்டி அளித்திருந்தார்.
44
இது வைரலானதை அடுத்து, நடிகை நித்யா மேனன் அந்த இளைஞரால் தான் 6 வருடங்களாக டார்ச்சர் அனுபவித்து வருவதாக கூறி இருக்கிறார். தான் பலமுறை அவர் அழைக்கும் மொபைல் எண்ணை பிளாக் செய்தாலும், வேறு வேறு எண்களில் இருந்து அழைத்து அவன் தொல்லை தருவதாக கூறி உள்ளார். இதுவரை அவனிடமிருந்து வந்த 30 மொபைல் எண்களை தான் பிளாக் செய்துள்ளதாக நித்யா மேனன் தெரிவித்துள்ளார். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.