இன்று டாப் நடிகராக இருக்கும், விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் இயக்குனராக மாறியவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படம் இவருக்கு சிறந்த அறிமுக இயக்குனர் என்கிற அந்தஸ்தை பெற்று தந்ததோடு, பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.