Gautham Karthik
திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அடிக்கடி காதல் கிசுகிசுவில் சிக்குவது வழக்கமான ஒன்று தான். அப்படி சிக்கும் நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் தங்களது காதலை மறுத்தாலும், பின்னர் காதலை ஒப்புக்கொண்டு திருமண வாழ்க்கையில் இணைகிறார்கள்.
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சிமா மோகன், தமிழில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகனார்.
தற்போது இவரது கைவசம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வரும் "October 31st Ladies Night' என்கிற படம் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் இவர் நடிகர் கெளதம் கார்த்தியுடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டதாக கடந்த சில வருடங்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், கெளதம் கார்த்திக் தொடர்ந்து, மௌனம் காத்து வந்தார்.