சேலத்தை சேர்ந்த பிரபல மாடலான சுருதி, தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற தீவிர முயற்சி செய்து வரும் நிலையில், இவர் குந்தவையாக மாரி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
விளையாட்டு வீராங்கனையும், மாடலுமான சுருதி பெரிய சாமி, மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து படித்து முன்னேறி தற்போது மாடலிங் துறையிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்து, மாடலிங் என்கிற ஒரு துறை இருக்கிறது என்றே தெரியாமல் அந்த துறையில் நுழைந்து தற்போது, வெற்றிநடை போட்டு வரும் சுருதி பெரியசாமி, அவ்வப்போது தினுசு தினுசாக போஸ் கொடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
த்ரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, இவரது தோற்றம் உள்ளதாக நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். ஒரு வேலை த்ரிஷாவுக்கு முன்னர் மணிரத்தினம் இவரை பார்த்திருந்தால்... இவரே கூட ஹீரோவாக நடித்திருக்கலாம்.
இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது மட்டும் இன்றி, குந்தவை செந்தாமரை நிறத்தினள், குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வட்டமாயிருந்தது. குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப் போலக் காதளவு நீண்டு பொலிந்தன. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப் போல் இருந்தது. குந்தவையின் இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. குந்தவையின் கூந்தலோ “இவள் அழகின் அரசி” என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப் போல அமைந்து இருந்தது.“ என்கிற கல்கியின் வரிகளை பதிவிட்டுள்ளார்.