தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் என வரிசையாக ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன், கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான டாக்டர் படம் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் போன்ற படங்களில் நடித்தார்.
24
தமிழில் இதுவரை இவர் நடிப்பில் ரிலீஸான 3 படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளன. இதனால் பிரியங்கா மோகனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வரும் பிரியங்கா, தற்போது மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
அதன்படி, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் பிரியங்கா மோகன். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க அவர் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
44
இன்று நடைபெற்ற பூஜையில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், எம்.ராஜேஷ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படத்தில் நட்டி நட்ராஜ் வில்லனாக நடிக்க உள்ளாராம். மேலும் நகைச்சுவை வேடத்தில் விடிவி கணேஷ் நடிக்க இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.