"இடம் தெரியாமல் அழிச்சிடுவேன்"..ராதிகாவை விளாசிய பாக்கியலட்சுமியின் மாமியார்!

Published : Aug 05, 2022, 02:39 PM IST

நீங்க எல்லோருமே விஷப்பாம்புகள் என திட்டும் ஈஸ்வரி இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவேன் என  மிரட்டிவிட்டு செல்கிறார்.

PREV
14
"இடம் தெரியாமல் அழிச்சிடுவேன்"..ராதிகாவை விளாசிய பாக்கியலட்சுமியின் மாமியார்!
baakiyalakshmi

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. சீரியல் துவங்கிய சிறிது காலத்திலேயே டாப் 10ற்கு  வந்துவிட்டது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமிக்கு இல்லத்தரசர்களின் ஆதரவு ஏகபோகம். மூன்று பிள்ளைகளுக்கு தாயான பாக்கியலட்சுமி படிக்காதவர் என்பதால் அவரது கணவரால் புறக்கணிக்கப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் பாக்கியலட்சுமியின் கணவனான கோபி தனது முன்னாள் காதலியை சந்தித்த உடன் அவருடன் வாழ நினைத்து பாக்கியாவை விவாகரத்து செய்ய பல சூழ்ச்சிகளை செய்கிறார்.

24
Baakiyalakshmi

இது ஒரு கட்டத்தில் பாக்கியலட்சுமிக்கு தெரிய வர தனது குடும்பத்திற்கும் தெரியப்படுத்திவிட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பின்னர் சமீபத்தில் வீடு திரும்பிய பாக்கியலட்சுமி பார்த்த குடும்பத்தினர் மிகுந்த சந்தோஷம் அடைகின்றனர். ஆனால்  தனது கணவர் கேட்டபடி விவாகரத்து கொடுக்க சம்மதித்து விட்டு மீண்டும் வீட்டை விட்டு கிளம்புகிறார் பாக்கியா.  

மேலும் செய்திகளுக்கு...'இந்தியன் 2'- ல் காஜல் அகர்வால்.. படப்பிடிப்பை உறுதி செய்த நாயகி !

 

34

இந்நிலையில் இன்றைய எபிசோடில், கோர்ட்டுக்கு வந்த பாக்யாவிடம் அப்பா இங்கு வருவாரா என எழில்  கேட்கிறார் அதற்கு அவர் நான் பேசிய பேச்சுக்கலாம் எவ்வளவு திமிர் இருந்தா இப்படி சொல்லி இருப்பான்னு கண்டிப்பா வருவார் என்கிறார் பாக்கியா. அடுத்ததாக ராதிகா வீட்டுக்கு  செல்வியுடன் போகும் கோபியின் தாய் ஈஸ்வரி அவரை கடுமையாக திட்டி தீர்க்கிறார். கோபியுடன் வாழ பாக்யாவுக்கு பணம் கொடுத்து உதவி செய்தாயா? ஒரு பக்கம் வந்து நல்ல பொண்ணு மாதிரி இருந்துட்டு மறுபக்கம் பாக்யாவுக்கு துரோகம் செஞ்சிட்டியே என ஆத்திரத்தின் கத்துகிறார்.

மேலும் செய்திகளுக்கு...நடிகர் சந்தானத்திற்கு இவ்ளோ பெரிய மகனா? வைரலாகும் புகைப்படம்!

அவரை தடுக்க நினைக்கும் ராதிகாவின் அம்மாவையும் அண்ணனையும் சாடும் ஈஸ்வரி உனக்காக பாக்யா என்னெல்லாம் பண்ணி இருக்கா தெரியுமா எனக் கூறும் முன்பு நடந்தவற்றையெல்லாம் விவரிக்கிறார் இதனை கேட்டு ராதிகா குற்ற உணர்ச்சிகள் நொந்து போகிறார்.

44
baakiyalakshmi

இறுதியாக ராதிகாவின் குழந்தை மாயூ ஈஸ்வரியிடம் சண்டை போடாதீங்க பாட்டி என கூற அவளை தள்ளிவிட்டு நீங்க எல்லோருமே விஷப்பாம்புகள் என திட்டும் ஈஸ்வரி இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவேன் என  மிரட்டிவிட்டு செல்கிறார். இதனால் கடுப்பான ராதிகாவின் தாயார் நீ கோபியை தான் கல்யாணம் பண்ண வேண்டும். எல்லோரும் உன்னை திட்ட தான் செய்றாங்க நீ செஞ்ச தியாகம் பற்றி யாருக்கும் தெரியாது என கூறுகிறார்.  ஆனால் ராதிகாவோ கோபியால் ஏற்பட்ட பிரச்சனையால் நொந்து போய் அழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

மேலும் செய்திகளுக்கு...Fighters-யை பெருமையா பேசுனா ஒரே ஆள் விஜய் தான் : சண்டை கலைஞர் கிருஷ்ணா

Read more Photos on
click me!

Recommended Stories