பிரபல தென்னிந்திய முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் சமீபத்தில் தான் தாயானார். மகப்பேறு இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டார். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் சமூக ஊடகம் மூலம் பேசிய காஜல், தான் இந்தியன் 2 வில் தொடர்வதை உறுதி செய்துள்ளார். அதோடு படப்பிடிக்கு செப்டம்பர் 13ஆம் தேதி துவங்க உள்ளதாகவும் நடிகை தெரிவித்துள்ளார்.