படத்தில் இவர்களுடன் இணைந்து பிரதீப் ராவத், மரியம் சார்ஜ், சாய் தீனா, லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. சர்க்கிள் பாய்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ் ராஜ் நாராயணன் தயாரித்திருந்த இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. .
மேலும் செய்திகளுக்கு...Fighters-யை பெருமையா பேசுனா ஒரே ஆள் விஜய் தான் : சண்டை கலைஞர் கிருஷ்ணா
இந்த படத்தில் சந்தானம் கூகுள் என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். அமேசான் காட்டில் பிறக்கும் இவர் அங்கே ஏற்படும் பிரச்சினை காரணமாக தன் தாயை இழக்கிறார். பின்னர் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு வெவ்வேறு நாட்டில் நாடோடியாக திரியும் இளைஞன் பின்னர் சென்னை வந்தடைகிறார். உதவும் குணம் கொண்ட நாயகன் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட நபரை அவரது நண்பர்களுடன் சேர்ந்து தேடும் பயணத்தை மையமாகக் கொண்டு குலு குலு உருவாகியுள்ளது.
சென்டிமென்ட் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்த்தில் சந்தோஷ நாராயணனின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களின் வரவேற்பு பெற்றது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு, ப்ரவீன் எடிட்டிங்செய்திருந்தனர்.