கோலிவுட்டில் வாரிசு நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறதா? நடிகை ஆத்மிகாவின் ஆதங்க பதிவால் வெடித்த சர்ச்சை

Published : Aug 05, 2022, 01:12 PM IST

Aathmika : நடிகை ஆத்மிகா போட்டுள்ள டுவிட் ஒன்று கோலிவுட்டில் வாரிசு நடிகைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறதா என்கிற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. 

PREV
15
கோலிவுட்டில் வாரிசு நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறதா? நடிகை ஆத்மிகாவின் ஆதங்க பதிவால் வெடித்த சர்ச்சை

ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆத்மிகா. கோயம்புத்தூர் பெண்ணான இவர் சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது சொந்த முயற்சியால் சினிமாவுக்குள் நுழைந்தார். இவர் அறிமுகமான முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

25

இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன், டீகேவின் காட்டேரி போன்ற படங்களில் நடிக்க கமிட் ஆன இவர், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நடித்த இரண்டு படங்களும் ரிலீசாகாமல் முடங்கிப் போயின. இதனால் பட வாய்ப்பின்றி தவித்து வந்த ஆத்மிகாவுக்கு கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

35

கடந்த ஆண்டு ரிலீசான இப்படமும் அவருக்கு பெரிதாக பெயரை பெற்றுத்தரவில்லை. தற்போது அவர் கைவசம் உதயநிதியின் கண்ணை நம்பாதே திரைப்படம் மட்டுமே உள்ளது. இதன்பின் ஒரு படம் கூட கைவசம் இல்லாததால் இன்ஸ்டாகிராமில் விதவிதமாக புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் ஆத்மிகா.

இதையும் படியுங்கள்... Sita Ramam : அந்த ஒரு காரணத்துக்காக துல்கர் சல்மானின் ‘சீதாராமம்’ படத்திற்கு திடீரென தடை விதிப்பு

45

இந்நிலையில், அவர் போட்டுள்ள டுவிட் ஒன்று கோலிவுட்டில் வாரிசு நடிகைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறதா என்கிற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. அந்த டுவிட்டில், சிலருக்கு ஏணியில் ஏற ஈஸியாக வாய்ப்பு கிடைத்து விடுகிறது. ஆனால் மற்றவர்கள் என குறிப்பிட்டு பாத்துக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

55

அவர் ஷங்கர் மகளுக்கு அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை சாடி தான் ஆத்மிகா, இவ்வாறு மறைமுகமாக பதிவிட்டுள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஒரு சிலரோ நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் நீங்களும் ஈஸியாக முன்னேறலாம் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஒரு கால் இல்லாமல் பிரபு தேவா ...வென்றதா பொய்க்கால் குதிரை ? விமர்சனம் இதோ!

click me!

Recommended Stories