தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் வாரிசு படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் புஷ்பாநாயகி ராஷ்மீகா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, குஷ்பூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். குடும்ப செண்டிமெண்ட் கலந்த கமர்சியல் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. ஐதராபாத், சென்னையை அடுத்து மீண்டும் இந்த படம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை துவங்க உள்ளதாக பேசப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...பாய்மரப் படகு பயணத்தில் உலக சாதனை..காவலர்களுக்கு வாழ்த்து சொன்ன கமல்