ப்ளீஸ் எங்களுக்காக மறுபடியும் நிர்வாணமா நடிங்க.... கெஞ்சி கேட்ட பிரபல நிறுவனம் - ஏற்பாரா ரன்வீர் சிங்?

Published : Aug 05, 2022, 02:23 PM IST

Ranveer Singh : பாலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், அண்மையில் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கினார். 

PREV
14
ப்ளீஸ் எங்களுக்காக மறுபடியும் நிர்வாணமா நடிங்க.... கெஞ்சி கேட்ட பிரபல நிறுவனம் - ஏற்பாரா ரன்வீர் சிங்?

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். நடிகை தீபிகா படுகோனேவில் கணவரான இவர், கடைசியாக 83 படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. இது கடந்த 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.

24

இப்படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து அசத்தி இருந்தார் ரன்வீர் சிங். 83 படத்தின் வெற்றிக்கு பின் பல பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ரன்வீர் சிங். குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கிலும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ரன்வீர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... 'இந்தியன் 2'- ல் காஜல் அகர்வால்.. படப்பிடிப்பை உறுதி செய்த நாயகி !

34

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், அண்மையில் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கினார். அவரின் இந்த போட்டோஷூட் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும் ஆலியா பட், வித்யா பாலன், விஷ்ணு விஷால், ராக்கி சாவந்த் போன்ற திரைப்பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர்.

44

இந்நிலையில், நடிகர் ரன்வீர் சிங்கை மீண்டும் நிர்வாணமாக நடிக்க பீட்டா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பின் விளம்பரத்திற்காக நிர்வாணமாக நடிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனை ஏற்று ரன்வீர் சிங் மீண்டும் பிறந்தமேனிக்கு நிர்வாணமாக நடிப்பாரா அல்லது மறுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பீட்டா என்பது விலங்கு வதைகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு சில ஆண்டுகள் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டதற்கும் இந்த அமைப்பு தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இந்திய டிரம்ஸ் கலைஞரின் வீடியோவை உலகளவில் வைரலாக்கிய ஜஸ்டின் ஃபீபர்.. முடிஞ்சா இந்த வீடியோவை சிரிக்காம பாருங்க

Read more Photos on
click me!

Recommended Stories