நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்கிற மாஸ் கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'விக்ரம்'. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.சூர்யா இந்த படத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், மிகப்பெரிய அளவில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் மற்றொரு முன்னணி நடிகரின் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இணையான ரோலில் படு மாஸ் கெட்டப்பில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூர்யா 'வனங்கான்' படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் இணைவார் என கூறப்படுகிறது, இதைத்தொடர்ந்து சுதாகர் சிறுத்தை சிவா ஞானவேல் ஆகியோர் இயக்கத்தில் அடுத்தடுத்து சூர்யா நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.