திருமணம் ஆகி விவாகரத்து ஆன பிறகும் கூட, தென்னிந்திய சினிமாவில் மற்ற முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளவர் சமந்தா. தற்போது பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ள சமந்தா, கட்டுப்பாடு இன்றி கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார். எனவே நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர், சமந்தாவின் சினிமா மார்க்கெட் மளமளவென உயர்ந்து வருகிறது.
தற்போது நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கில் உருவாகி உள்ள திரைப்படம் குஷி. இந்த படத்தில் சமந்தா விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் அளவுக்கு அதிகமாகவே சில நெருக்கமான காட்சிகளிலும், லிப் லாக் காட்சிகளிலும் கூட நடித்துள்ளதாக கூறப்டுடுகிறது. இதுதவிர யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அந்த வகையில் தற்போது இஸ்லாமிய மணப்பெண்ணாக மாறி இவர் எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.