கணவர் வீட்டில் அனுபவித்த டார்ச்சர்... விவாகரத்துக்கான காரணத்தை முதன்முறையாக போட்டுடைத்த விஜே மகேஸ்வரி

Published : Aug 06, 2022, 08:29 AM ISTUpdated : Aug 06, 2022, 03:15 PM IST

விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்த நடிகை விஜே மகேஸ்வரி, தான் விவாகரத்து செய்ததற்கான காரணம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசி உள்ளார்.

PREV
15
கணவர் வீட்டில் அனுபவித்த டார்ச்சர்... விவாகரத்துக்கான காரணத்தை முதன்முறையாக போட்டுடைத்த விஜே மகேஸ்வரி

தொலைக்காட்சிகளில் பேவரைட் விஜே-வாக வலம் வந்தவர் மகேஸ்வரி. அசத்தப் போவது யாரு என்கிற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆன மகேஸ்வரி, திருமணத்துக்கு பின்னர் சில ஆண்டுகள் சின்னத்திரையை விட்டு விலகினார். இவருக்கு கேஷவ் என்கிற மகனும் உள்ளார். 

25

திருமணமான சில ஆண்டுகளிலேயே இவர் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் மகேஸ்வரி, அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியும் வருகிறார். தற்போது தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் மகேஸ்வரி, விவாகரத்துக்கான காரணம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசி உள்ளார்.

35

திருமணத்துக்கு பின்னர் கணவர் வீட்டில் தன்னை மிகவும் அடிமைப்படுத்தியதாக கூறியுள்ள மகேஸ்வரி, நண்பர்களுடன் பழகக்கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போட்டதாக தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆண்களுடன் நடிக்கக் கூடாது என கூறியதால் தான் சீரியலில் நடிப்பதையே நிறுத்திவிட்டதாக கூறியுள்ள மகேஸ்வரி, மீறி சீரியலில் நடிச்சா குடும்ப மானம் போய்விடும் என கணவர் வீட்டார் பல பிரச்சனைகளை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... விக்ரம் தந்த விஸ்வரூப வெற்றி... சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய கமல்! - அதுவும் இத்தனை கோடியா?

45

கணவர் வீட்டில் இவ்வாறு பல கட்டுப்பாடுகள் விதித்ததால் தான் ஒரு கட்டத்தில் பணத்துக்கே மிகவும் கஷ்டப்பட்டதாகவும் கூறியுள்ளார் மகேஸ்வரி. தன் அம்மாவுக்கு கூட பண உதவி செய்யக்கூடாது என கணவர் வீட்டார் டார்ச்சர் செய்ததாகவும், இதனால் தனது அம்மா வீட்டு வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதாக ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

55

இந்த பிரச்சனைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவே விவாகரத்து முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ள மகேஸ்வரி, விவாகரத்துக்கு பின்னர் தான் நிம்மதியாக இருப்பதாக கூறியுள்ளார். தற்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறா மகேஸ்வரி, சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... திருமணத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய கீர்த்தி சுரேஷ்... அரசியல்வாதியுடன் விரைவில் டும்டும்டும்?

click me!

Recommended Stories