தன்னுடைய திரைப்படங்களுக்காக அதிக மெனக்கெடல்களை மேற்கொள்பவர் வெற்றிமாறன் என்பது அனைவரும் அறிந்ததே. உண்மையில் இந்த "விடுதலை" படத்தின் இரண்டாம் பாகத்திற்காக விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது எட்டு நாள் கால் சீட் மட்டுமே, இருப்பினும் கிட்டத்தட்ட ஓராண்டு காலத்திற்கும் மேலாக அந்த திரைப்படத்தில் பயணித்து அப்படத்தை அவர் முடித்துக் கொடுத்திருக்கிறார். அண்மையில் விடுதலை 2 இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதிக்கு இதற்காக பெரிய அளவில் வெற்றிமாறன் நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
அதே போல இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் வெற்றிமாறன் தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார். இந்த சூழலில் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாக ட்ரைலர் வெளியான நிலையில், அதில் வரும் சில வசனங்களையும், காட்சிகளையும் குறிப்பிட்டு பிரபல இயக்குனரும், திரைப்பட விமர்சனமான ப்ளூ சட்டை மாறன் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.